மத்திய அரசின் விருது - அரசிதழில் 2 தமிழ்ப்படங்கள்

ஒத்த செருப்பு, ஹவுஸ் ஓனர் ஆகிய படங்களுக்கு மத்திய அரசு விருது அறிவித்துள்ள நிலையில் அதற்கான அறிவிப்பு அரசிதழில் வெளியாகி இருக்கிறது.

மத்திய அரசின் விருது - அரசிதழில் 2 தமிழ்ப்படங்கள்
ஒத்த செருப்பு | ஹவுஸ் ஓனர்
  • Share this:
இந்திய மொழிப் படங்களுக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் விருது வழங்கி வருகிறது. அதன்படி கடந்த 2019-ம் ஆண்டுக்கான விருதுகள் பட்டியலில் ஒத்த செருப்பு, ஹவுஸ் ஓனர் ஆகிய இரண்டு தமிழ்ப் படங்கள் இடம்பெற்றுள்ளன.

‘ஒத்த செருப்பு சைஸ் 7’ என்ற படத்தை, கடந்த ஆண்டு பார்த்திபன் இயக்கி, தயாரித்து இருந்தார். இந்த படத்தில் பார்த்திபன் மட்டும் ஒற்றை ஆளாய் நடித்தது, தமிழ் திரை உலகில் பெரிதாக பேசப்பட்டது. கடந்த ஆண்டு இந்தப் படம், கோவாவில் நடைபெற்ற தேசிய திரைப்படவிழாவில் திரையிடப்பட்டது. அப்போது, இந்த படத்திற்கு விருது அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கான அறிவிப்பு அரசிதழில் வெளியாகி இருக்கிறது.

இதேபோன்று, லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கிய, ஹவுஸ் ஓனர் படத்திற்கான விருதும் அரசிதழில் வெளியிடப்பட்டு இருக்கிறது. நடிகர் கிஷோர், ஸ்ரீ ரஞ்சனி, லவ்லின் சந்திரசேகர் உள்ளிட்டோர் நடித்திருந்த இந்தப் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. 2015-ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தை பின்னணியாகக் கொண்டு இத்திரைப்படத்தின் கதை உருவாக்கப்பட்டிருந்தது.


விருது பற்றிய அறிவிப்பு அரசிதழில் வெளியாகியிருப்பது குறித்து பார்த்திபன் ட்வீட் செய்துள்ளார். அதில், “ஏற்கனவே இந்தியன் பனோரமாவால் தேர்ந்தெடுக்கப்பட்ட படங்களை மத்திய அரசின் செய்தி அறிக்கை வெளியிட்டதை ‘தேசிய விருதா’ய் ஊடகங்கள் கொண்டாடியதை புரிந்துக் கொள்ள முடிந்தது. உலகெங்கும் பாராட்டுக்கள். மணியோசை முன்னரே வந்துவிட்டது, யானை வரும் பின்னே! பின்னே வேறென்னச் சொல்லி சமாளிப்பது .?” என்று தனக்கே உரிய பாணியில் கருத்து பதிவிட்டிருக்கிறார்.


‘ஒத்த செருப்பு’ திரைப்படத்துக்கு மத்திய அரசு விருது அறிவித்திருப்பது குறித்து கருத்து பதிவிட்டிருக்கும் அமைச்சர் வேலுமணி, “'ஒத்த செருப்பு' திரைப்படத்திற்காக மத்திய அரசு விருது அறிவித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. தன் திரைப்படங்கள் வாயிலாக தமிழ் சினிமாவின் தரத்தை சர்வதேச அளவிற்கு உயர்த்தும் "விருதுகளின் நாயகன்" சகோதரர் பார்த்திபன் மேலும் பற்பல சாதனைகள் படைக்க உளமார வாழ்த்துகிறேன்.” என்று கூறியுள்ளார்.
First published: October 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading