95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது. ஒட்டுமொத்த உலகின் கவனத்தையும் ஈர்த்துள்ள இந்த விழாவில், இந்திய நடிகை தீபிகா படுகோன் விருது வழங்குபவர்களில் ஒருவராக உள்ளார். இந்நிலையில் ஆஸ்கார் விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில், மரகதமணி இசையமைப்பில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் சிறந்த பாடலுக்காக ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த பாடல் ஏற்கனவே கோல்டன் குளோப் விருதுகளைப் பெற்றுள்ளது. நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் முதுமலையில் உருவான ‘The Elephant Whisperers’ சிறந்த ஆவண குறும்படமாக ஆஸ்கரால் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Oscar Awards