93-வது ஆஸ்கர் விருதுகள்: நோமேட்லேண்ட் படத்துக்கு 3 விருதுகள் - வெற்றியாளர்கள் விவரம்

93-வது ஆஸ்கர் விருதுகள்: நோமேட்லேண்ட் படத்துக்கு 3 விருதுகள் - வெற்றியாளர்கள் விவரம்

கோப்புப் படம்

93வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில், சிறந்த இயக்குனருக்கான விருதை, நோ-மேட்லேண்ட் படத்தை இயக்கிய, பெண் இயக்குநர் சோலி ஜாவோ வென்று அசத்தியுள்ளார்.

  • Share this:
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் நடைபெறும் ஆஸ்கர் விருது வழங்கும் விழா, கொரோனா பரவல் காரணமாக நடப்பாண்டில் தாமதமாக நடைபெறுகிறது. கொரோனா முன்னெச்சரிக்கையாக லாஸ் ஏஞ்சல்சில் உள்ள, யூனியன் ஸ்டேஷன் மற்றும் டால்பி தியேட்டர் ஆகிய இரண்டு இடங்களில் விழா அரங்கேறியுள்ளது.

விழாவில் பங்கேற்கும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், நடப்பாண்டும் தொகுப்பாளர் இன்றியே விழா நடைபெற்றது. விழாவின் தொடக்கத்தில் நடந்த சிவப்பு கம்பள வரவேற்பில், ஏராளமான சர்வதேச திரைத்துறை நட்சத்திரங்கள் உற்சாகமாக பங்கேற்றனர்.

காட்சி அமைப்புக்கான விருது, கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய TENET திரைப்படத்திற்கு வழங்கப்பட்டது. சிறந்த துணை நடிகைக்கான விருதை, கொரியன் படமான minari-யில் நடித்த yuh jung youn கைப்பற்றினார். வாழ்க்கை வரலாறு தொடர்பான் MANK திரைப்படம், சிறந்த ஒளிப்பதிவு மற்றும் கலை இயக்குனருக்கான விருதுகளை கைப்பற்றியது.

திரைத்துறையில் 100 ஆண்டுகளாக ஈடுபட்டுள்ள மோஷன் பிக்சர் மற்றும் டெலிவிஷன் பண்ட் எனும் அமைப்பின் சேவையை பாராட்டி சிறப்பு விருது வழங்கப்பட்டது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சிறந்த இயக்குனருக்கான விருது, நோ-மேட்லேன்ட் படத்தை இயக்கிய சீன பெண் இயக்குனர், சோலி ஜாவோவுக்கு ((Chloé Zhao)) வழங்கப்பட்டது.

சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான விருது, டென்மார்க்கின் அனதர் ரவுண்ட் திரைப்படத்திற்கு வழங்கப்பட்டது. சிறந்த துணை நடிகருக்கான விருதை, Judas and the Black Messiah படத்தில் நடித்த டேனியல் கலூயா வென்றார். இதன் மூலம், ஆஸ்கர் விருதை வென்ற ஆறாவது கருப்பின ஆண் நடிகர் எனும் பெருமையை பெற்றுள்ளார். சிறந்த ஒப்பனை மற்றும் ஆடை வடிவமைப்பிற்கான இரண்டு ஆஸ்கர் விருதுகளையும், மா ma rainey's black bottom திரைப்படம் வென்று அசத்தியது.

சிறந்த திரைக்கதைக்கான விருதை promising young women படத்தின் இயக்குனரும், கதாசிரியருமான எமரால்டு ஃபென்னல் வென்றார். உண்மை சம்பவத்தை தழுவி எழுதப்பட்ட சிறந்த திரைக்கதைக்கான விருதை, தி பாதர் படத்தின் எழுத்தாளர்களான கிரிஷ்டோபர் ஹாம்ப்டன் மற்றும் ஃப்ளோரியன் ஜெல்லர் ஆகியோர் பெற்றனர்.

சிறந்த ஒலி வடிவமைப்பு மற்றும் சிறந்த தொகுப்பிற்கான விருதை SOUND OF METAL திரைப்படமும், சிறந்த குறும்படத்திற்கான விருதை two distant strangers படமும் வென்றன. சிறந்த ஆவணப்படமாக MY OCTOPUS TEACHER படமும், சிறந்த ஆவண குறும்படமாக Colette-வும் தேர்ந்தெடுக்கப்பட்டது.
Published by:Sheik Hanifah
First published: