ஒரே நாடு, ஒரே மக்கள் என்ற சிந்தனைக்கு எதிரான போராட்டம்...! உலகைத் திரும்பிப் பார்க்கவைத்த ஜோக்கர் நாயகன் பேச்சு

Oscars 2020 |

ஒரே நாடு, ஒரே மக்கள் என்ற சிந்தனைக்கு எதிரான போராட்டம்...! உலகைத் திரும்பிப் பார்க்கவைத்த ஜோக்கர் நாயகன் பேச்சு
வாக்கீன் பீனிக்ஸ்
  • Share this:
ஒரே நாடு, ஒரே மக்கள் என்ற நம்பிக்கைக்கு எதிரான சண்டை குறித்து நாம் தொடர்ந்து பேசிவருகிறோம் என்று ஆஸ்கர் விருது வென்ற வாக்கீன் பீனிக்ஸ் தெரிவித்துள்ளார். 

ஜோக்கர் படத்துக்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது வாக்கீன் பீனிக்ஸுக்கு வழங்கப்பட்டது. ஆஸ்கர் விருது விழாவில் பேசிய அவர், ‘இந்த சினிமா துறையை பலர் குரலற்றவர்களுக்கு குரல் கொடுப்பதற்காக பயன்படுத்துகின்றனர். . அதுதான் எனக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு என்று நினைக்கிறேன். நாம் இயற்கையான உலகுக்கு செல்லவேண்டும். நாம், அதனுடைய வளங்களுக்காக அதனை கொள்ளையிடுகிறோம். நாம் செயற்கை முறையில் மாட்டை கருவுறச் செய்து அதனுடைய கன்றை நாம் திருடுகிறோம்.

இருந்தாலும், மாட்டின் வேதனை கலந்த அழுகை தவறானது அல்ல. பின்னர், அதனுடைய கன்றுக்காக இருக்கும் பாலை நாம் எடுத்துக் கொண்டு நம்முடைய காஃபிக்காகவும் உணவுக்காகவும் பயன்படுத்திக் கொள்கிறோம். நாம் தொடர்ச்சியாக எதிர்கொள்ளும் மன அழுத்தத்தை ஏற்படுத்தக் கூடிய நிகழ்வுகள் குறித்து நான் சிந்தித்துக் கொண்டிருந்தேன்.


நாம் அநீதிக்கு எதிரான எதிர்ப்பு குறித்து பேசுகிறோம். நாம், ஒரு நாடு, ஒரே மக்கள், ஒரே இனம், ஒரே பாலினத்துக்கு மட்டும் அதிகாரம் செய்ய உரிமை உள்ளது, தண்டனை வழங்க உரிமை உள்ளது, அவர்களைக் கட்டுப்படுத்த உரிமை உள்ளது என்ற நம்பிக்கைக்கு எதிரான எதிர்ப்பு குறித்து பேசுகிறோம். நான் மோசமானவனாக இருந்திருக்கிறேன். நான், சுயநலவாதியாக இருந்திருக்கிறேன்.

பல நேரங்களில் கொடூரமானவனாக இருந்திருக்கிறேன். நான் மிகவும் கொடுத்து வைத்தவன், இந்த அறையில் உள்ள பலர் எனக்கு இரண்டாவது முறை வாய்ப்பு அளித்துள்ளனர். எப்போது நாம் ஒருவொருக்கொருவர் ஆதரவாக இருக்கிறோமோ? ஒருவருடைய கடந்த காலத்துக்காக அவரை நீக்காமல் எப்போது இருக்கிறோமோ? ஒருவொருக்கொருவர் வளர்வதற்கு உதவி செய்துகொண்டு இருக்கிறோமோ? எப்போது ஒருவொருக்கொருவர் கற்றுக்கொடுத்துக் கொண்டு இருக்கிறோமோ?

எப்போது ஒருவொருக்கொருவர் வழிகாட்டுகிறோமோ? அப்போதுதான் நாம் சிறப்பானவராக இருக்கிறோம் என்று நான் நினைக்கிறேன். அதுதான் மிகச் சிறந்த மனிதாபிமானம்’ என்று உருக்கமாக பேசினார். அவருடைய பேச்சுக்கு உலக அளவில் பாராட்டுகள் குவிந்துவருகின்றன.Also see:

First published: February 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading