இந்தி படங்களில் என்னை தேவையில்லை என்று கூறுகிறார்கள் - ஆஸ்கர் விருது வென்ற ரசூல் பூக்குட்டி உருக்கம்

ரசூல் பூக்குட்டி

ஏ.ஆர்.ரஹ்மானைத் தொடர்ந்து இந்தி திரையுலகம் மீது ஆஸ்கர் விருது பெற்ற ரசூல் பூக்குட்டியும் பட வாய்ப்புகள் மறுக்கப்படுவதாக குற்றம்சாட்டை முன்வைத்துள்ளார்.

 • Share this:
  பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இந்தி திரையுலகில் தனக்கு எதிராக ஒரு கூட்டம் செயல்படுவதாகவும், பட வாய்ப்புகள் தடுக்கப்படுவதாகவும் தெரிவித்திருந்தார்.

  அதைத்தொடர்ந்து திரை பிரபலங்கள் பலர் அவருக்கு ஆதரவு குரல் கொடுத்து வரும் நிலையில், ஸ்லம்டாக் மில்லியனர் படத்தின் சிறந்த இசைக்கலவைக்காக ஆஸ்கர் விருது பெற்ற ரசூல் பூக்குட்டியும் இந்தி திரையுலகம் தன்னை புறக்கணிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.

  ஆஸ்கர் விருது வென்ற பின்னர் இந்தியில் பட வாய்ப்புகள் மறுக்கப்படுவதாகவும், தன்னை தேவையில்லை என்று இந்தி பட தயாரிப்பு நிறுவனங்கள் கூறி வருவதாகவும் வேதனை தெரிவித்துள்ளார்.

  பாலிவுட் திரையுலகுக்குள் தன்னால் எளிதில் நுழைந்துவிட முடியும் என்ற போதிலும், அங்கு செல்ல மாட்டேன் என்றும் இந்திய திரையுலகம் தான் தனக்கு ஆஸ்கர் விருது பெற்றுத் தந்ததாகவும் டிவிட்டரில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
  Published by:Sheik Hanifah
  First published: