ஆஸ்கர் விருது வென்றுள்ள எம் எம் கீரவாணி இசையமைத்த பாடல்கள் சிலவற்றை இங்கே குறிப்பிடுகிறோம்.
அழகன் திரைப்படத்தில் இடம் பெற்ற சங்கீத ஸ்வரங்கள் பாடலை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க மாட்டார்கள். விடிய விடிய உரையாடல் தொடரும் பொழுதெல்லாம் இந்த பாடல் ஒருவர் நினைவிற்காவது வரும். இந்தப் பாடலை இசை அமைத்த மரகத மணி தான் தற்பொழுது ஆஸ்கர் விருது பெற்ற கீரவாணி என்பது பலருக்கும் தெரியாத விஷயம். தெலுங்கு சினிமாவில் 1990-ல் கோலோச்சி வந்த மரகதமணி இதே இடைவெளியில் பல்வேறு தமிழ் பாடல்களுக்கும் இசையமைத்துள்ளார்.
90களில் இவர் இசையமைத்த வசந்த் இயக்கத்தில் வெளியான நீ பாதி நான் பாதி, பாட்டொன்று கேட்டேன் சிவந்த மலர்கள் உள்ளிட்ட திரைப்படங்களில் உள்ள பாடல்கள் இன்றளவும் பலரின் அபிமான பட்டியலில் இருந்து வருகிறது.
ஜாதிமல்லி, பிரதாப் என அடுத்தடுத்து ஒரு சில தமிழ் திரைப்படங்களுக்கு மட்டுமே கீரவாணி இசையமைத்த போதும் கீரவாணியின் இசையில் உருவான பாடல்கள் தமிழ் சினிமாவில் மறக்க முடியாத பாடல்களாகவே அமைந்தது.
90-களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் இசையமைப்பதில் இருந்து பெரும் ஓய்வு எடுத்துக் கொண்ட கீரவாணியை அவ்வப்போது கொண்டாட்டம், Student No1, இஞ்சி இடுப்பழகி உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் தமிழுக்கு அழைத்து வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. எனினும் பாகுபலி திரைப்படம் தமிழ் தெலுங்கு மட்டுமல்லாது ஒட்டுமொத்த உலகிற்கும் எம்.எம் கீரவாணியின் இசைத்திறன் என்ன என்பதை நிரூபித்தது.
ராஜமவுலியின் நெருங்கிய உறவினரான கீரவாணி உடன் முதல் படத்திலிருந்து பணியாற்றி வரும் ராஜமவுலி, இசையில் கீரவாணிக்கான அங்கீகாரத்தை பெற்று தர வேண்டும் என பலமுறை பேட்டிகளில் குறிப்பிட்டுள்ளார். அதனை மெய்ப்பிக்கும் வண்ணம் தற்பொழுது தனது RRR திரைப்படத்தின் மூலம் கீரவாணிக்கான ஆஸ்கர் விருதை வென்று கொடுத்து தனது சபதத்தை நிறைவேற்றியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Oscar Awards, Rajamouli