Home /News /entertainment /

Oscar 2022: மனைவி குறித்து கிண்டல்.. ஆஸ்கர் விழாவில் தொகுப்பாளரை கன்னத்தில் அறைந்த வில் ஸ்மித் (வீடியோ)

Oscar 2022: மனைவி குறித்து கிண்டல்.. ஆஸ்கர் விழாவில் தொகுப்பாளரை கன்னத்தில் அறைந்த வில் ஸ்மித் (வீடியோ)

வில் ஸ்மித்

வில் ஸ்மித்

Oscar நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிகொண்டிருந்த கிறிஸ் ராக் (Chris rock) வில் ஸ்மித் (will smith) மனைவி ஜாடா பிங்கெட் (Jada pinkett smith) தலையை மொட்டை அடித்துள்ளது தொடர்பாக கிண்டலாக பேசினார். இதனால் ஆத்திரம் அடைந்த வில் ஸ்மித் மேடைக்கே சென்று அவரது கன்னத்தில் அறைந்தார்.

மேலும் படிக்கவும் ...
    ஆஸ்கர் விருது வழங்கும் விழாவின்போது தனது மனைவி ஜாடா பிங்கெட் ஸ்மித் குறித்து கிண்டலாக பேசிய தொகுப்பாளர் கிறிஸ் ராக் கன்னத்தில் நடிகர் வில் ஸ்மித் பளார் என அறைந்தது அங்கிருந்தவர்களை அதிர்ச்சி அடைய செய்தது. பின்னர் தன் செயலுக்காக அவர் மன்னிப்புக் கோரினார்.

    அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 94வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. மொத்தமாக 24 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டது. இதில் கிங் ரிச்சர்ட் படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றார் நடிகர் வில் ஸ்மித். சிறந்த நடிகைக்கான விருது ஜெசிகா கேஸ்டெய்னுக்கு வழங்கப்பட்டுள்ளது. The Eyes of Tammy Faye திரைப்படத்தில் நடித்ததற்காக இந்த விருது கிடைத்துள்ளது.

    முன்னதாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக், வில் ஸ்மித் மனைவி ஜாடா பிங்கெட் ஸ்மித் மொட்டை அடித்தது போன்ற சிகை அலங்காரத்துடன் காணப்பட்டது தொடர்பாக கிண்டல் செய்துள்ளார். இதற்கு வில் ஸ்மித்தும் சிரித்தபடி இருந்தார். திடீரென மேடையில் ஏறிய வில் ஸ்மித் கிறிஸ் ராக் கன்னத்தில் பளார் என அறைந்தார். இதனை சற்றும் எதிர்பார்க்காத அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

     

    க்ரிஸ் ராக் அதிர்ச்சியிலிருந்து மீண்டு, Wow Will Smith just smacked the s**t out of me  என்று  கூறி நிலைமையை சமாளிக்க முயன்றார். வில் ஸ்மித் தனது இருக்கையில் சென்று அமர்ந்த பின்னர், என் மனைவி குறித்து பேசாதே என்று கோபமாக கூறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.   விளம்பர இடைவேளையின்போது வில் ஸ்மித்தை தனியாக அழைத்து சென்று நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் சமாதானம் செய்தனர்.

    இதையும் படிங்க: Dune Oscar 2022: 6 ஆஸ்கர் விருதுகளை அள்ளிய ட்யூன்!


    பின்னர், ஆஸ்கர் விருதை பெற்றுகொண்டு வில் ஸ்மித் ஆற்றிய உரையில், இது அழகான தருணம். ரிச்சர்ட் வில்லியம்ஸ் (அவரது காதபாத்திரத்தின் பெயர்) தனது குடும்பத்தினருக்காக எதையும் செய்வார். நான் ரிச்சர்ட் வில்லியம்ஸைப் போலவே பைத்தியக்கார தந்தையைப் போல் இருக்கிறேன்.

    மேலும் படிக்க: Oscar 2022: சிறந்த படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்ற கோடா!


    ஆனால் அன்பு உங்களை பைத்தியக்காரத்தனமான செயல்களைச் செய்ய வைக்கும்’ என்று கூறினார். மேலும், தனது செயலுக்காக ஆஸ்கர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் சக நடிகர் நடிகையரிடம் மன்னிப்பு கோரிய வில் ஸ்மித், மீண்டும் தன்னை விருது நிகழ்ச்சிக்கு ஆஸ்கர் அழைக்கும் என நம்புவதாக குறிப்பிட்டார்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Oscar Awards, Will Smith

    அடுத்த செய்தி