ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண் - ஜுனியர் என்டிஆர் இணைந்து நடித்த ஆர்ஆர்ஆர் படத்தின் நாட்டு நாட்டு சிறந்த பாடல் என்ற ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும் செல்லோ ஷோ (Chhello Show) குஜராத்தி படமும் ஆல் தி பிரீத்ஸ் (All that Breathes) என்ற ஆவணப் படமும், தி எலிபேன்ட் விஸ்பரர்ஸ் (The Elephant Whisperers) என்ற ஆவணப் படமும் இந்திய சார்பில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.
ஆஸ்கர் விருது விழாவில் பங்கேற்கும் படங்களுக்கு ஆஸ்கர் கமிட்டி உறுப்பினர்கள் வாக்களிப்பது வழக்கம். அதிக அளவு வாக்குகளை பெறும் படங்களுக்கு விருதுகள் வழங்கப்படும். இந்த ஆண்டு ஆஸ்கர் விருது உறுப்பினர் குழுவில் புதிதாக 397 உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தியா சார்பில் நடிகர் சூர்யா மற்றும் கஜோல் ஆகியோர் ஆஸ்கர் விருதுக்கு திரைப்படங்களை தேர்வு செய்யும் குழுவின் உறுப்பினர்களாக தேர்வாகியிருந்தனர்.
இந்த நிலையில் ஆஸ்கர் விருது கமிட்டியின் உறுப்பினரான சூர்யா தனது வாக்கினை பதிவு செய்துவிட்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் ஸ்கிரீன்ஷாட் பகிர்ந்துள்ளார். அவர் யாருக்கு வாக்களித்தார் என்பது குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பிவருகின்றனர்.
Voting done! #Oscars95 @TheAcademy pic.twitter.com/Aob1ldYD2p
— Suriya Sivakumar (@Suriya_offl) March 8, 2023
நடிகர் சூர்யாவின் சூரரைப் போற்று, ஜெய் பீம் படங்கள் கடந்த இரண்டு வருடங்களாக ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஒட்டுமொத்தமாக ஆஸ்கர் உறுப்பினர் குழுவில் உலகம் முழுவதும் இருந்து சுமார் 4,000 அதிகமான உறுப்பினர்கள் உள்ளனர். தமிழ் திரையில் இருந்து ஏற்கனவே ஏ.ஆர். ரஹ்மான் ஆஸ்கர் தேர்வு குழு உறுப்பினராக உள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Suriya, Oscar Awards