11 பிரிவுகளில் ஜோக்கர் படம் பரிந்துரை! ஆஸ்கர் விருது பரிந்துரைப் பட்டியல் முழு விவரம்

11 பிரிவுகளில் ஜோக்கர் படம் பரிந்துரை! ஆஸ்கர் விருது பரிந்துரைப் பட்டியல் முழு விவரம்
ஆஸ்கர்
  • News18
  • Last Updated: January 13, 2020, 9:07 PM IST
  • Share this:
ஜோக்கர் திரைப்படம் 92-வது ஆஸ்கர் விருது விழாவில் 11 விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

சினிமாவுக்கென்று வழங்கப்படும் உலகின் மிக உயரிய விருதுகாக கருதப்படும் 92-வது ஆஸ்கர் விருது விழா பிப்ரவரி 10-ம் தேதி நடைபெறவுள்ளது. அந்த விழாவில் கடந்த ஆண்டு 2019-ம் ஆண்டு வெளியான சிறந்த படங்கள், சிறந்த நடிகர்கள், கலைஞர்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டு வழங்கப்படும். தற்போது ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட படங்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி,
ஹாலிவுட்டின் ஜோக்கர் திரைப்படம் இந்த ஆண்டு அதிகபட்சமாக 11 ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, ஐரிஷ்மேன், ஒன்ஸ் அப் ஆன் எ டைம் இன் ஹாலிவுட், 1917 ஆகிய படங்கள் 10 ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.


விருது பரிந்துரைகள் விவரம்:

சிறந்த திரைப்படம்:

ஃபோர்டு v ஃபெராரித ஐரிஷ்மேன்
ஜோ ஜோ ரேபிட்
ஜோக்கர்
லிட்டில் உமென்
மேரேஜ் ஸ்டோரி
1917
ஒன்ஸ் அப்ஆன் ஏ டைம் இன் ஹாலிவுட்
பாராசைட்

சிறந்த இயக்குநர்:

மார்டின் ஸ்கோர்செஸ்(த ஐரிஷ்மேன்)
டாட் பிலிப்ஸ்(ஜோக்கர்)
சாம் மென்டெஸ்(1917)
குயின்டின் டரன்டினோ(ஒன்ஸ் அப்ஆன் ஏ டைம் இன் ஹாலிவுட்)
பாங் ஜூன் ஹோ(பாராசைட்)

சிறந்த நடிகை:

சைன்தியா எரிவோ(ஹாரியெட்)
ஸ்கேர்லெட் ஜான்சன்(மேரேஜ் ஸ்டோரி)
சேஷா ரோனன்(லிட்டில் உமென்)
சார்லிஸ் தெருன்(பாம்ஷெல்)
ரினீ ஷெல்வெஜெர்(ஜுடி)

சிறந்த நடிகர்:

அன்டோனியோ பந்தெராஸ்(பெய்ன் அன்ட் குளோரி)
லியார்னாடோ டிகாபிரியோ(ஒன்ஸ் அப்ஆன் ஏ டைம் இன் ஹாலிவுட்)
ஜோக்குயின் போனிக்ஸ் (ஜோக்கர்)
ஜோனோதன் ப்ரெஸ்(த டூ போப்ஸ்)

சிறந்த குணசித்திர நடிகை:

காதி பேட்ஸ்(ரிச்சர்ட் ஜுவல்)
லவுரா டெரன்(மேரேஜ் ஸ்டோரி)
ஸ்கேர்லெட் ஜான்சன்(ஜோ ஜோ ரேபிட்)
ஃப்ளோரென்ஸ் புக்(லிட்டில் உமன்)
மார்கோட் ராப்பி(பாம் ஷெல்)

சிறந்த குணசித்திர நடிகர்:

டாம் ஹென்க்ஸ் (எ பியூட்டிஃபுல் டே இன் த நெய்பர்ஹுட்)
அன்தோனி ஹோப்கின்ஸ் (த டூ போப்ஸ்)
அல் பசினோ(த ஐரிஷ்மேன்)
ஜோ பெஸ்சி (த ஐரிஷ்மேன்)
ப்ராட் பிட்(ஒன்ஸ் அப்ஆன் ஏ டைம் இன் ஹாலிவுட்)

நேரடி திரைக்கதை:

ரைன் ஜான்சன்(நைவ்ஸ் அவுட்)
நோவா பவும்பாக்(மேரேஜ் ஸ்டோரி)
சாம் மென்டெஸ், க்ரெஸ்டி வில்சன் கார்ன்ஸ்(1917)
குயின்டின் டரன்டினோ (ஒன்ஸ் அப்ஆன் ஏ டைம் இன் ஹாலிவுட்)
பாங் ஜூன் ஹு, ஹான் ஜின் உன் (பாராசைட்)

தழுவல் திரைக்கதை:

கிரிடா ஜெர்விக்(லிட்டில் உமென்)
அந்தோனி மெக்கார்டென்(த டூ போப்ஸ்)
டோட் பிலிப்ஸ், ஸ்கார்ட் சில்வர்(ஜோக்கர்)
தைய்கா வைடிடி (ஜோ ஜோ ரேபிட்)
ஸ்டிவன் சைலியான்(த ஐரிஷ்மேன்)

இதைத்தவிர சிறந்த அனிமேஷன் திரைப்படம், சிகை அலங்காரம், ஒளிப்பதிவு, காட்சி அமைப்புகள் உள்ளிட்ட பல விருதுகளுக்கான பரிந்துரைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

Also see:


 
First published: January 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading