ஆஸ்கர் விருது குழுவில் உறுப்பினராக சேர நடிகர் சூர்யாவுக்கு அழைப்பு கிடைத்துள்ள நிலையில் தமிழ் சினிமாவுக்கும் ஆஸ்கருக்கும் உள்ள தொடர்பை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
சினிமா உலகிற்கு தலைசிறந்த உயர்ந்த விருது என்றால் அது ஆஸ்கார் விருதுதான். திரைத்துறையில் சாதிக்கத் துடிக்கும் கலைஞர்களின் உச்சபட்ச கனவும் இந்த விருதே. ஆஸ்கார் விருது பெறத் தகுதி பெறும் திரைப்படங்கள் எதுவென்று இந்திய அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்பட்ட குழுவொன்றினால் பரிசீலக்கப்பட்டு பின் தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படங்கள் வேற்று மொழிகளில் சிறந்த திரைப்படங்களிற்கான ஆஸ்கார் விருதுக்கான திரைப்படங்களைத் தேர்ந்தெடுக்கும் குழுவிடம் பரிந்துரைக்கப்படும். அப்படி முதல் முதலில் இந்திய அரசால் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட திரைப்படம் 1969 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் நடிப்பில் வெளிவந்த ’தெய்வமகன்’ திரைப்படம். இயக்குநர் திரிலோகசந்தர் இயக்கி தந்தை, இரு மகன்கள் என மூன்று வேடங்களில் சிவாஜி நடித்த இத்திரைப்படம் தமிழ் சினிமாவில் இருந்து அனுப்பப்பட்ட முதல் திரைப்படம் என்ற பெருமையும் பெற்றது.
வெளியானது நடிகர் பரத்தின் 'முன்னறிவான்' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர்
கேங்ஸ்டர் படங்களுக்கு டிரேட் மார்க்கை கொடுத்த திரைப்படம் மணிரத்னம் - கமல்ஹாசன் கூட்டணியில் உருவான ’நாயகன்’ 1988 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்கர் விருது விழாவுக்கு சிறந்த வெளிநாட்டு திரைப்பட பிரிவில் பரிந்துரைக்கப்பட்டு நாயகன் உலக நாயகனானான். அதேபோல் அதே மணிரத்னம் இயக்கத்தில் முழுக்க முழுக்க குழந்தைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம் அஞ்சலியும் 3 தேசிய விருதுகளையும் வாங்கிக் குவித்து பின் ஆஸ்கர் விருதுக்கு சிறந்த வெளிநாட்டு பட பிரிவில் பரிந்துரைக்கப்பட்டது.
Suriya: ஆஸ்கர் அழைப்பை ஏற்ற சூர்யா... பொறுப்புணர்வை உணர்த்துவதாக முதல்வருக்கு பதில்!
இந்திய சினிமா உலகமே வியந்து பார்த்த திரைப்படம் கமல்ஹாசன் சிவாஜிகணேசன் நடிப்பில் உருவான ’தேவர்மகன்’. பரதன் இயக்கத்தில் சாதியை மையப்படுத்தி கலவையான விமர்சனங்களை பெற்ற இத்திரைப்படம் சிறந்த வெளிநாட்டு படப்பிரிவில் ஆஸ்கர் விருதுக்கு 1992 ஆம் ஆண்டு பரிந்துரைக்கப்பட்டு தேவர் மகனை தேசிய மகனாக்கியது. ஆஸ்கார் விருதை என்றேனும் ஒரு நாள் பெற்றே தீருவேன் என அடம்பிடித்த கமல்ஹாசனின் திரைப்படங்களான ‘குருதி புனல்’, ‘ இந்தியன்’, ‘’ ஹேராம்’ ஆகிய படங்கள் மிகச்சிறந்த வெளிநாட்டு திரைப்படம் என்ற பிரிவில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டன.
ஒரு உண்மை கதையை அடிப்படையாக கொண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வந்த திரைப்படம் ‘விசாரணை’. இந்திய அளவில் பல விருதுகளை வாங்கி குவித்த இத்திரைப்படமும் ஆஸ்கர் விருதுக்கான இறுதிப் பரிந்துரை பட்டியல் வரை தேர்வானது. ஒரே மனிதனை வைத்துக்கொண்டு சுவாரசியமான திரைப்படத்தை ரசிக்கும்படி கொடுக்க பார்திபனின் ’ஒத்த செருப்பு’ திரைப்படமும் பிற மொழி படங்களுக்கான பிரிவில் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டது.
கதையின் நாயகனாக யோகிபாபு நடித்திருந்த ’மண்டேலா’ பாத்திரமான அரசியலை நகைச்சுவையாக சொல்லி ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டது ஆஸ்கார் விருதினை தனது வாழ்நாளில் அடையவேண்டும் என்ற பல படைப்பாளிகளின் கனவுகளுக்கு எப்போதும் சிவப்பு கம்பளம் விரிக்கும் தமிழ் சினிமா.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Surya, Kamal Haasan, Kollywood, Oscar Awards, Tamil Cinema