Oscar 2022: சிறந்த படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்ற கோடா!
Oscar 2022: சிறந்த படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்ற கோடா!
ஆஸ்கர் 2022
பவர் ஆஃப் தி டாக் 12 பரிந்துரைகளைப் பெற்றது. டூன் 10 பரிந்துரைகளையும், பெல்ஃபாஸ்ட் மற்றும் வெஸ்ட் சைட் ஸ்டோரி தலா ஏழு பரிந்துரைகளையும் பெற்று சமநிலையில் இருந்தன.
94-வது அகாடமி விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்தது.
சினிமா நட்சத்திரங்களைப் பொறுத்தவரை தங்களின் மிகச் சிறந்த நாள் இது என்பதால், நேர்த்தியான உடையணிந்து அவர்கள் இவ்விழாவில் கலந்துக் கொண்டனர். இந்த ஆஸ்கர் விருது வழங்கும் விழாவை Amy Schumer, Regina Hall மற்றும் Wanda Sykes ஆகியோர் தொகுத்து வழங்கினர். இதில் விருது வாங்கியவர்களின் விபரங்களை இங்கே குறிப்பிடுகிறோம்.
இந்தில் பவர் ஆஃப் தி டாக் 12 பரிந்துரைகளைப் பெற்றது. டூன் 10 பரிந்துரைகளையும், பெல்ஃபாஸ்ட் மற்றும் வெஸ்ட் சைட் ஸ்டோரி தலா ஏழு பரிந்துரைகளையும் பெற்று சமநிலையில் இருந்தன. கிங் ரிச்சர்ட் ஆறு பரிந்துரைகளைப் பெற்றிருந்தது.
சிறந்த படம்: கோடா - Coda
சிறந்த இயக்குனர்: ஜேன் கேம்பியன் (தி பவர் ஆஃப் தி டாக்) - Jane Campion (The Power Of The Dog)
சிறந்த நடிகை: ஜெசிகா சாஸ்டெய்ன் (தி ஐஸ் ஆஃப் டாமி ஃபே) - Jessica Chastain (The Eyes Of Tammy Faye)
சிறந்த நடிகர்: வில் ஸ்மித் (கிங் ரிச்சர்ட்) - Will Smith (King Richard)
சிறந்த துணை நடிகை: அரியானா டிபோஸ் (வெஸ்ட் சைட் ஸ்டோரி) - Ariana DeBose (West Side Story)
சிறந்த துணை நடிகர்: ட்ராய் கோட்சூர் (கோடா) - Troy Kotsur (CODA)
சிறந்த அசல் திரைக்கதை: பெல்ஃபாஸ்ட் - Bellfast
சிறந்த தழுவல் திரைக்கதை: கோடா - CODA
சிறந்த சர்வதேச திரைப்படம்: டிரைவ் மை கார் (ஜப்பான்) - Drive My Car (Japan)
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.