Home /News /entertainment /

Oscar: இதுவரை ஆஸ்கர் கண்ட சர்ச்சைகள்!

Oscar: இதுவரை ஆஸ்கர் கண்ட சர்ச்சைகள்!

கிரிஸ் ராக்கை அறைந்த வில் ஸ்மித்

கிரிஸ் ராக்கை அறைந்த வில் ஸ்மித்

ஆஸ்கரில் கருப்பின கலைஞர்கள் புறக்கணிக்கப்படுவதாக 2016-ம் ஆண்டு ஓர் குற்றச்சாட்டு எழுந்து Oscar So White எனும் ஹாஷ் டேக் சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆனது.

ஆஸ்கர் மேடையில் சக நடிகரை வில் ஸ்மித் அறைந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் இதுவரை ஆஸ்கர் கண்ட சர்ச்சைகளை இங்கே குறிப்பிடுகிறோம். 

அண்மையில் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற 94வது ஆஸ்கர் விருது விழாவில் தனது மனைவியின் உடல்நிலையை கேலி செய்த நடிகரும் தொகுப்பாளருமான கிரிஸ் ராக்கை பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் அறைந்த விவகாரம்தான் தற்போதைய சோசியல் மீடியாவின் ஹாட் டாபிக். ஆனால் ஆஸ்கர் மேடையில் சர்ச்சை கிளம்புவது இது ஒன்றும் புதிதல்ல.

உலகப் புகழ்பெற்ற தி காட்பாதர் படத்திற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை வென்ற மர்லன் பிராண்டோ அவ்விருதை புறக்கணித்ததோடு பூர்வீக அமெரிக்க மக்களுக்காக குரல் கொடுத்தார். அவர் சார்பாக விழாவில் பங்கேற்ற நடிகை Sacheen Littlefeather மர்லன் பிராண்டோவின் அறிக்கையை மேடையில் வாசித்தது அந்நாளில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

2003ம் ஆண்டு தி பியானிஸ்ட் படத்துக்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை வென்ற Adrein Boody விழா மேடையிலேயே சக நடிகையான Halley Berry-க்கு அவர் அனுமதி இல்லாமல் முத்தமிட்டது பெரும் கண்டனத்தை பெற்றது. அந்த முத்தத்தை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை என Halley Berry அண்மையில் கூட ஒரு பேட்டியில் கூறும் அளவு இவ்விவகாரம் தற்போது வரை பேசு பொருளாக உள்ளது.

ஏ.ஆர் ரஹ்மான் ஆல்பத்தில் பாடி, நடித்துள்ள சன் டிவி சீரியல் நடிகை!

2012-ம் ஆண்டு பிரபல ஹாலிவுட் நடிகரான Sacha Baron Cohen தனது The Dictator படத்தை விளம்பரப் படுத்தும் வண்ணம் ஆஸ்கர் சிவப்பு கம்பள வரவேற்பு நிகழ்ச்சியில் General Aladeen தோற்றத்தில் பங்கேற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கூடவே வடகொரியத் தலைவர் Kim Jong-il-ன் அஸ்தியை தான் கையில் வைத்திருப்பதாக அவர் கூறியதும் சர்ச்சையை ஏற்படுத்தியதால் அவர் உடனடியாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்.



ஆஸ்கரில் கருப்பின கலைஞர்கள் புறக்கணிக்கப்படுவதாக 2016-ம் ஆண்டு ஓர் குற்றச்சாட்டு எழுந்து Oscar So White எனும் ஹாஷ் டேக் சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆனது. இதைத்தொடர்ந்து வில் ஸ்மித், ஸ்பைக் லீ போன்ற கருப்பின கலைஞர்கள் ஆஸ்கர் விழாவில் பங்கேற்க மறுத்ததும் உலகம் முழுவதும் கவனம் இருந்தது.

Sivakarthikeyan: 4 கோடி சம்பள பாக்கியை தரக்கோரி பிரபல தயாரிப்பாளர் மீது சிவகார்த்திகேயன் வழக்கு



இதன் உச்சமாக 2017 ஆம் ஆண்டு சிறந்த படத்துக்கான பெயரை மாற்றி கூறியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. மூன்லைட் படத்துக்கு சிறந்த திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருது தேர்வாகி இருந்த நிலையில் தொகுப்பாளர் தவறுதலாக லா லா லாண்ட் படக்குழுவினரை மேடைக்கு அழைத்து பின்னர் கீழே அனுப்பியது ஆஸ்கர் மேடையில் அரங்கேறிய மிகப்பெரிய குளறுபடியாக தற்போதுவரை பார்க்கப்படுகிறது.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published:

Tags: Oscar Awards

அடுத்த செய்தி