ஒரு கிடாயின் கருணை மனு படத்தின் இசையமைப்பாளர் ரகுராம் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார்.
வித்தார்த் நடிப்பில் சுரேஷ் சங்கையா இயக்கத்தில் வெளியான ஒரு கிடாயின் கருணை மனு படத்திற்கு ரகுராம் என்பவர் இசையமைத்தார். அந்த திரைப்படத்தின் இசையும், பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. திரைப்படங்கள் தவிர சில ஆல்பங்களுக்கும் இசையமைத்துள்ளார்.
இளம் இசை அமைப்பாளரான ரகுராம் 8ம் வகுப்பு படிக்கும்போதே, மறைந்த விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்-க்கு (Stephen Hawking ) பாதிப்பை ஏற்படுத்திய amyotrophic lateral sclerosis என்ற Geneti நோய் இவரையும் தாக்கி இருந்தது. இதற்காக அவர் பல ஆண்டுகளாக சிகிச்சை எடுத்து வந்தார். குறிப்பாக அவர் ஒரு மாதம் உயிர் வாழ, மாதம் 10 லட்சம் ரூபாய் செலவிட வேண்டி இருந்தது. இதற்கான செலவை அவரின் தாய் மாமன் கொடுத்து வந்தார். அதன் காரணமாக தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
மேலும் அவர் 32 வயது வரை வாழ்வார் என மருத்துவர்கள் தெரிவித்து இருந்தனர். ஆனால் அதையும் தாண்டி தன்னுடைய தன்னம்பிக்கையால் 38 வயது வரை அவர் வாழ்ந்துள்ளார். இந்த நிலையில் நேற்று அவருக்கு தீவிர உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து வடபழனியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி ரகுராம் உயிரிழந்தார். அவரின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.
ட்ரிப்ஸ் ஏற்றிக்கொண்டே டப்பிங்.. இன்ஸ்டா பதிவால் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த சமந்தா!
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Death, Music director