தன்னுடைய ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் 21 பேருக்கு கொரோனா - லாரன்ஸ் உருக்கமான அறிக்கை

தனது ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் 21 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக நடிகர் ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார்.

தன்னுடைய ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் 21 பேருக்கு கொரோனா - லாரன்ஸ் உருக்கமான அறிக்கை
குழந்தைகளுடன் ராகவா லாரன்ஸ்
  • Share this:
கொரோனா காலகட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வரும் லாரன்ஸ், அது குறித்த விவரங்களை தனது சமூகவலைதளத்தில் அவ்வப்போது பதிவிடுவார்.

இந்நிலையில் நேற்று, தான் நடத்தி வரும் ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது, ஆதரவற்ற குழந்தைகளுக்காக நான் ஓர் அறக்கட்டளை நடத்துவதை அனைவரும் அறிவீர்கள். ஒரு வாரத்துக்கு முன்னர் சில குழந்தைகளுக்கு காய்ச்சல் அறிகுறிகள் தெரிந்தன. இதையடுத்து பரிசோதனை செய்து பார்த்த போது 18 குழந்தைகளுக்கும் 3 ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இவர்களில் இரண்டு பேர் மாற்றுத்திறனாளி ஊழியர்கள். இதனால் நான் மிகுந்த வேதனையடைந்தேன்.


ஆனால் சிகிச்சையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தார்கள். உடல் வெப்பநிலை காய்ச்சல் குறைந்து சீராகியுள்ளது. நெகட்டிவ் என பரிசோதனை முடிவு தெரிந்த பின்னர் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்கள்.

உடனடியாக உதவி செய்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவருடைய உதவியாளர் ரவி, சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆகியோருக்கு நன்றி.

நான் செய்யும் சேவைகள் என் குழந்தைகளைக் காப்பாற்றும். குழந்தைகள் மீண்டு வர அனைவரும் பிரார்த்தனை செய்யுங்கள். சேவையே கடவுள்” என்று கூறியுள்ளார்.


மேலும் படிக்க: ரசிகர்கள் சிலிர்த்து போவார்கள்... மாஸ்டர் ட்ரெய்லர் பற்றி மாளவிகா மோகனன் கமெண்ட்First published: May 29, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading