வைரமுத்துவுக்கு விருது வழங்குவது தொடர்பாக மறுபரிசீலனை - ஓ.என்.வி விருதுகுழு அறிவிப்பு

கவிப்பேரரசு வைரமுத்து

வைரமுத்துவுக்கு விருது வழங்குவதற்கு தொடர்பாக மறுபரிசீலனை செய்யப்படும் என்று ஓ.என்.வி விருதுகுழு தெரிவித்துள்ளது.

 • Share this:
  மலையாளக் கவிஞரும் பாடலாசிரியரும் ஞானபீட விருது பெற்றவருமான ஓஎன்வி குறுப்புவின் பெயரில் இலக்கியத்துக்காக வழங்கப்படும் விருது முதன்முறையாக கேரளாவை சேராத ஒருவரான கவிஞர் வைரமுத்துக்கு அறிவிக்கப்பட்டது. இந்த விருதைப் பெறுவதில் தாம் மிகுந்த மகிழ்ச்சியடைவதாக வைரமுத்து தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், வைரமுத்துவுக்கு விருது அறிவிக்கப்பட்டதற்கு அவர் மீது நீண்ட காலமாக பாலியல் புகார் தெரிவித்துவரும் பாடகி சின்மயி கண்டனம் தெரிவித்திருந்தார்.

  இதுதொடர்பான அவருடைய ட்விட்டர் பதிவில், ‘வைரமுத்துவுக்கு விருது வழங்கப்படுவதற்கு மறைந்த ஓ.என்.வி.குருப் பெருமைப்படுவார்’ என்று பதிவிட்டிருந்தார்.
  அவரைத் தொடர்ந்து, மலையான நடிகை பார்வதியும் வைரமுத்துவுக்கு விருது அறிவிக்கப்பட்டதற்கு அதிருப்தியை வெளிப்படுத்தினார். இதுதொடர்பான அவருடைய ட்விட்டர் பதிவில், ‘"ஓ.என்.வி ஐயா எங்கள் பெருமை. ஒரு கவிஞர் மற்றும் பாடலாசிரியராக அவரின் பங்களிப்பு ஒப்பிடமுடியாதது. இது நம் கலாச்சாரத்தை எவ்வாறு வளர்த்தது. அவரது பணியால் நம் இதயங்களும், மனங்களும் பயனடைந்துள்ளன. பாலியல் வன்கொடுமை குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அவரது பெயரில் மரியாதை வழங்குவது மிகுந்த அவமரியாதைக்குரியது” எனக் கடுமையான கண்டனங்களை வெளிப்படுத்தியிருந்தார்.

  அவரைத் தொடர்ந்து பல்வேறு எழுத்தாளர்களும், பெண்ணியவாதிகளும் வைரமுத்துவுக்கு விருது அறிவிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தனர். இந்தநிலையில், வைரமுத்து விருது வழங்குவது தொடர்பாக மறுபரிசீலனை செய்யவுள்ளதாக ஓ.என்.வி கலாச்சார மையம் தெரிவித்துள்ளது.

  இதுதொடர்பாக தி இந்து நாளிதழுக்கு பேட்டியளித்துள்ள ஓ.என்.வி கலாச்சார மையத்தின் தலைவரும் மலையாள திரையுலகின் மிகச் சிறந்த இயக்குநருமான அடூர் கோபாலகிருஷ்ணன், ‘வைரமுத்து மீது இருக்கும் பாலியல் புகார் குறித்து நடுவருக்கு தெரியாமல் இருந்திருக்கலாம். வைரமுத்து எழுத்தை மட்டும் கணக்கில்கொண்டு அவருக்கு விருது வழங்கும் முடிவை நடுவர்கள் எடுத்திருக்கலாம். இந்த விருது தொடர்பாக ஏற்கெனவே வைரமுத்துவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கூட்டம் நடத்தி விரைவில் முடிவு செய்யப்படும்’ என்று தெரிவித்தார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: