தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மட்டுமே இனி படங்களில் வேலை செய்ய முடியும் - ஆர்.கே.செல்வமணி

ஆர்.கே.செல்வமணி

தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் மட்டுமே படப்பிடிப்பு தளத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 • Share this:
  தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மட்டுமே இனி திரைப்பட பணிகளில் அனுமதிக்கப்படுவார்கள் என ஃபெப்சி தொழிற்சங்கத்தின் தலைவர் ஆர்.கே. செல்வமணி வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

  கொரோனா தொற்றின் காரணமாக பல படப்பிடிப்புகள் பாதியில் நிறுத்தப்பட்டன. டிசம்பர் மாதம் ஐதராபாத்தில் நடைபெற்ற ரஜினிகாந்தின் அண்ணாத்த படப்பிடிப்பு கூட பாதியில் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது ஊரடங்கு காரணமாக எந்த படப்பிடிப்பும் நடத்தப்படவில்லை. மீண்டும் படப்பிடிப்புகள் தொடங்கும் பொழுது அங்கு பணி செய்யும் அனைவரும் தடுப்பூசி எடுத்துக் கொண்டிருக்க வேண்டும் என்று ஃபெப்ஸி வாய்மொழி உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

  தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் மட்டுமே படப்பிடிப்பு தளத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. தடுப்பூசி எடுத்துக் கொள்ள முடியாத உடல் உபாதை உள்ளவர்கள் அதற்கான உரிய கடிதத்தை அளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  தவிர, இந்த மாதம் இறுதி வரை படப்பிடிப்பில் ஈடுபட மாட்டோம் என்று உறுதி எடுத்துள்ளதாக, தென்னிந்திய திரைப்படத்‌ தொழிலாளர்கள்‌ சம்மேளனமான ஃபெப்ஸி அமைப்பின் தலைவரும், இயக்குநருமான ஆர்.கே.செல்வமணி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: