ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

தமிழ் சினிமாவில் அடுத்த நட்சத்திர ஜோடி… காதலை அறிவித்த கவுதம் கார்த்திக்- மஞ்சிமா!

தமிழ் சினிமாவில் அடுத்த நட்சத்திர ஜோடி… காதலை அறிவித்த கவுதம் கார்த்திக்- மஞ்சிமா!

கவுதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன்

கவுதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன்

முத்தையா இயக்கிய தேவராட்டம் படத்தின்போது கவுதமுக்கும், அதில் நடித்த மஞ்சிமா மோகனுக்கும் இடையே நல்ல நட்புறவு ஏற்பட்டு, பின்னாளில் காதலாக வளர்ந்துள்ளது

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  காதல் வசப்பட்ட சினிமா நட்சத்திர ஜோடி, தனது காதலை உலகிற்கு இன்று அறிவித்தது. இருவருக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

  தமிழ் சினிமாவில் நடிகர், நடிகைகள் காதலித்து திருமணம் செய்து கொள்வது வழக்கமான ஒன்றுதான். ஷாலினி – அஜித், சூர்யா – ஜோதிகா, நயன்தாரா – விக்னேஷ் சிவன் என இந்த பட்டியல் சென்று கொண்டே இருக்கும்.

  அந்த வகையில் அடுத்த நட்சத்திர ஜோடி தனது காதலை உலகிற்கு இன்று அறிவித்துள்ளது. நடிகர் கவுதம் கார்த்திக் – நடிகை மஞ்சிமா மோகன் தங்களது காதலை வெளிப்படுத்தி சோஷியல் மீடியாவில் பதிவிட, அதற்கு ரசிகர்களும் பிரபலங்களும் வாழ்த்து கூறி வருகின்றனர்.

  தமிழ் சினிமாவின் மூத்த நடிகரான கார்த்திக் மகன் கவுதம் கார்த்தி.33 வயதாகும் இவர் 2013-இல் மணிரத்னம் இயக்கிய கடல் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனார். வை ராஜா வை, ரங்கூன், ஹரஹர மகா தேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து ஆகிய படங்களை கவுதமுக்கு வரவேற்பை பெற்றுத் தந்தன.

  ''நல்ல படத்துக்கு அதுவே விளம்பரம்..'' துணிவு பட புரொமொஷன் குறித்து அஜித் சொன்ன விஷயம்!

  முத்தையா இயக்கிய தேவராட்டம் படத்தின்போது கவுதமுக்கும், அதில் நடித்த மஞ்சிமா மோகனுக்கும் இடையே நல்ல நட்புறவு ஏற்பட்டு, பின்னாளில் காதலாக வளர்ந்துள்ளது. இதுபற்றிய விவரங்கள் வெளிவந்தபோதும் இந்த ஜோடி அதிகாரப்பூர்வமாக எதையும் அறிவிக்காமல் இருந்தது.

  இந்நிலையில் சோஷியல் மீடியாவில் கவுதமும், மஞ்சிமாவும் தங்களது காதலை அறிவித்துள்ளனர். இதுபற்றி மஞ்சிமா மோகன் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், ‘3 ஆண்டுகளுக்கு முன்பு நான் என்னை முழுவதும் இழந்திருந்தபோது காக்கும் தேவதையாக நீ வந்தாய். என் எண்ணத்தை மாற்றி நான் எவ்வளவு ஆசிர்வதிக்கப்பட்டவள் என்பதை உணர வைத்தாய். பிரச்னைகளை ஏற்றுக் கொண்டு நான் நானாக இருக்க வேண்டும் என்பதை புரிய வைத்தவன் நீ. எனக்கு பிடித்த எல்லாவற்றிலும் நீ இருப்பாய்’ என்று கவுதம் கார்த்திக்கை பார்த்து உருகியுள்ளார் மஞ்சிமா மோகன்.
   
  View this post on Instagram

   

  A post shared by Manjima Mohan (@manjimamohan)  தமிழில் கவுதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த அச்சம் என்பது மடமையடா படம் மஞ்சிமா மோகனுக்கு வரவேற்பை பெற்றுத் தந்தது.

  WATCH - பார்த்தாலே குளிரவைக்கும் சூப்பரான மழை பாடல்கள்!

  கவுதம் கார்த்திக், மஞ்சிமாவுக்கு பிரியா பவானி சங்கர், சித்தி இட்னானி, ரெபா மோனிகா, ரைஸா வில்சன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.

  Published by:Musthak
  First published:

  Tags: Kollywood