தீபாவளிக்கு முன் ஆன்லைனில் மட்டும் சினிமா டிக்கெட் விற்பனை சாத்தியமா? தயாரிப்பாளர் பதில்!

தீபாவளிக்கு முன் ஆன்லைனில் மட்டும் சினிமா டிக்கெட் விற்பனை சாத்தியமா? தயாரிப்பாளர் பதில்!
கோப்புப் படம்
  • News18
  • Last Updated: September 26, 2019, 4:05 PM IST
  • Share this:
திரையரங்குகளில் டிக்கெட் விற்பனையை முழுவதுமாக கணினி மயமாக்குவது தொடர்பாக தமிழக செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி, திரையரங்கு உரிமையாளர்கள் அபிராமி ராமநாதன், திருப்பூர் சுப்பிரமணியன் பன்னீர் செல்வம், தயாரிப்பாளர்கள் பாரதிராஜா, ஆர்.கே.செல்வமணி, ஐசரிகணேஷ், உதயகுமார், இசையமைப்பாளர் தீனா ஆகியோருடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்

இந்த கூட்டத்தில் திரையரங்குகளில் ஆன்லைன் டிக்கெட் விற்பனையின் போது கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதை முறைப்படுத்துவது தொடர்பான ஆலோசனையும் நடைபெற்றது.


கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் எஸ்.வி.சேகர், சர்வர் வழியாக டிக்கெட் விற்பனை செய்வது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.

மேலும் அதனை எவ்வாறு முறைப்படுத்துவது என்பது தொடர்பாகவும், நடைமுறை சிக்கல்களை சரி செய்வது, தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டதாக கூறிய அவர், 1000 இருக்கைகள் இருப்பதை 250 இருக்கையாக மாற்றி 4 திரையரங்காக அமைக்க அரசு உத்தரவிட வேண்டும் எனக் கூறினார்.

மனதிற்கு திருப்தி அளிக்கக்கூடிய வகையில் ஆலோசனை கூட்டமாக இந்த கூட்டம் அமைந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

பின்னர் பேசிய தயாரிப்பாளர் ராஜன், தீபாவளிக்கு முன் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த இயலாது என்று கூறினார்.

மேலும் தமிழ் திரையுலகை வளர்ப்பதற்கும், பொதுமக்களுக்கு நன்மை செய்யவே இந்த திட்டம் கொண்டுவரப்படுவதாக அமைச்சர் கூறியுள்ளதாக அவர் தெரிவித்தார். அரசு இதை நல்ல முறையில் செயல்படுத்த உள்ளதாகவும், ஆன்லைன் டிக்கெட் வேண்டும் என்பதில் தயாரிப்பாளர்கள் சங்கம் அக்கறையுடன் இருப்பதாகவும் அவர் கூறினார்.

வீடியோ பார்க்க: ஊரைக் காத்த நாய் கழுத்தை அறுத்து கொலை

First published: September 26, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading