ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

1 Year of Master: விஜய்யின் மாஸ்டர் பயண வீடியோவை வெளியிட்ட படக்குழுவினர்!

1 Year of Master: விஜய்யின் மாஸ்டர் பயண வீடியோவை வெளியிட்ட படக்குழுவினர்!

மாஸ்டர் விஜய்

மாஸ்டர் விஜய்

மாஸ்டர் வெளியானதை கொண்டாடும் வகையில், #OneYearOfMaster என்ற ஹேஷ் டேக் காலையிலிருந்தே ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் வெளியாகி இன்றோடு ஓராண்டு ஆனதை முன்னிட்டு, மாஸ்டர் படத்தின் பயண வீடியோவை வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர்.

கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்ட மாஸ்டர் திரைப்படம் கொரோனா தொற்றால் வெளியாக தாமதமானது. சேவியர் பிரிட்டோ, லலித் குமார், ஜெகதீஷ் பழனிச்சாமி ஆகியோர் தயாரித்திருந்த இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். விஜய்யுடன் இணைந்து விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ், சாந்தனு பாக்யராஜ், கெளரி கிஷன், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

கடந்த 2020-ல் கொரோனா தொற்று நோயால் பல மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்தது. பின்னர் நவம்பரில் தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும், பெரிதாக ரசிகர்கள் கூட்டம் இல்லாமல் இருந்தது. இதையடுத்து கடந்தாண்டு இதே தேதியில், அதாவது ஜனவரி 13-ம் தேதி பொங்கலுக்கு வெளியான மாஸ்டர் மீண்டும் ரசிகர்களை திரையரங்குகளை நோக்கி படையெடுக்கச் செய்தது. 50% பார்வையாளர்கள் மட்டுமே தியேட்டரில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கடந்தாண்டு அதிகம் வசூல் செய்த முதல் தமிழ் படம் என்ற பெருமையையும் விஜய்யின் மாஸ்டர் பெற்றுள்ளது.

' isDesktop="true" id="664849" youtubeid="qkBHXf9wq6Y" category="cinema">

இந்நிலையில் மாஸ்டர் வெளியானதை கொண்டாடும் வகையில், #OneYearOfMaster என்ற ஹேஷ் டேக் காலையிலிருந்தே ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. ரசிகர்களின் உற்சாகத்தை இன்னும் அதிகரிக்கும் வகையில், மாஸ்டர் திரைப்படம் கடந்த வந்த பாதை குறித்த பயண வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர். இதையடுத்து மேலும் கொண்டாட்ட நிலையில் இருக்கிறார்கள் ரசிகர்கள்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Actor Thalapathy Vijay, Beast, Master, Tamil Cinema