Home /News /entertainment /

பூஜையுடன் நாளை தொடங்குகிறது புஷ்பா 2 படத்தின் ஷூட்டிங்… ரசிகர்கள் உற்சாகம்

பூஜையுடன் நாளை தொடங்குகிறது புஷ்பா 2 படத்தின் ஷூட்டிங்… ரசிகர்கள் உற்சாகம்

புஷ்பா 2

புஷ்பா 2

கடத்தல் சிண்டிகேட்டின் தலைவனாக புஷ்பா மாறியது, பகத் பாசில் உடன் மோதல், ராஷ்மிகா உடனான திருமணத்துடன் முதல் பாகம் நிறைவு பெற்றிருக்கும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றான புஷ்பா படத்தின் 2ஆம் பாகத்தின் படப்பிடிப்பு நாளை பூஜையுடன் தொடங்கவுள்ளது. இதனை படத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

    சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன் நடிப்பில், தேவிஸ்ரீபிரசாத் இசையில் உருவான புஷ்பா திரைப்படம் கடந்த ஆண்டு டிசம்பரில் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பை பெற்றது.

    தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம், தமிழ், இந்தி மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் மிகப் பெரும் வரவேற்பை பெற்றது. செஞ்சந்தனம் மரங்களை வெட்டும் கூலித் தொழிலாளியாக தொடங்கி, மிகப்பெரிய கடத்தல் தாதாவாக அல்லு அர்ஜுன் உருவாகுவது முதல் பாகத்தில் இடம்பெற்றிருக்கும்.

    ஆதரவற்றோருடன் இணைந்து பிறந்த நாளை கொண்டாடிய நடிகை பூமிகா – பிரபலங்கள் வாழ்த்து

    விறுவிறுப்பான காட்சிகள், மிரட்டலான வில்லன்கள், அதிரடியான பாடல்கள் மனதை ஈர்க்கும் காதல் காட்சிகள் என புஷ்பா திரைப்படம் மிகச்சிறப்பான கமர்சியல் திரைப்படமாக வெளியானது. படத்தின் ஹீரோயின் ராஷ்மிகா மந்தனாவிற்கு குறிப்பிடத்தகுந்த காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும்.


    சமந்தா ஆடிய ஊ சொல்றியா பாடல் மிகப் பெரும் வரவேற்பைப் பெற்றது. வில்லன்களாக பகத் பாசில், தனஞ்செய், சண்முக், சுனில், அனுசுயா பரத்வாஜ் அஜய் கோஸ் உள்ளிட்டோர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தனர்.

    புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தில் அல்லு அர்ஜுன் தனது சாம்ராஜ்யத்தை எவ்வாறு விரிவுபடுத்தினார் என்பது குறித்த காட்சி இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக சீனா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

    இந்நிலையில் புஷ்பா படத்தின் 2ஆம் பாகத்துடைய ஷூட்டிங் பூஜையுடன் நாளை தொடங்கவுள்ளது. இதனை படத் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் அறிவித்துள்ளது.

    விருமன் படத்தின் பாடல் வரிகள் சர்ச்சை… வருத்தம் தெரிவித்தார் பாடலாசிரியர்

    இந்தியாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படத்தின் பூஜை என்று விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. கடத்தல் சிண்டிகேட்டின் தலைவனாக புஷ்பா மாறிய காட்சிகள் மற்றும் ராஷ்மிகா உடனான திருமணத்துடன் முதல் பாகம் நிறைவு பெற்றிருக்கும்.

    இரண்டாம் பாகத்தில் கூடுதல் வில்லன்கள் இடம்பெறுவார்கள் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகத்திற்கும் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.
    Published by:Musthak
    First published:

    Tags: Allu arjun

    அடுத்த செய்தி