Home /News /entertainment /

விக்ரம் நடித்துள்ள கோப்ரா படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு…

விக்ரம் நடித்துள்ள கோப்ரா படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு…

கோப்ரா படத்தில் விக்ரம்

கோப்ரா படத்தில் விக்ரம்

ஏற்கனவே வெளியான படத்தின் டீசர் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ட்ரெய்லர் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    விக்ரம் நடித்துள்ள கோப்ரா படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

    இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்துள்ள 'கோப்ரா' திரைப்படம் இந்த வருடத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும்.

    இப்படம் ஆகஸ்ட் 11-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இறுதிக் கட்ட பணிகள் நிறைவு பெறாததால் வெளியீடு 31-ம்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

    லலித் குமாரின் 7 ஸ்கிரீன் தயாரிப்பில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

    ஷாரூக்கான் நடிக்கும் ஜவான் படத்தின் ஷூட்டிங் சென்னையில் நாளை தொடக்கம்…

    முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் ‘கோப்ரா’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார். இதில் அஸ்லான் இல்மாஸ் என்ற துருக்கிய இன்டர்போல் அதிகாரியாக அவர் நடிக்கிறார். கோப்ரா படத்தில் விக்ரம் 20-க்கும் மேற்பட்ட தோற்றங்களில் நடிக்கிறார்.

    விக்ரம், இர்பான் பதான் தவிர 'கேஜிஎஃப்' புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி, மிருணாளினி, லால், கனிகா, பத்மப்ரியா, பாபு ஆண்டனி மற்றும் பலர் நடித்துள்ளனர்.



    யு/ஏ சான்றிதழை தணிக்கை வாரியம் கோப்ரா படத்திற்கு அளித்துள்ளது. இந்நிலையில் கோப்ரா படத்தின் ட்ரெய்லர் 25-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



    ஏற்கனவே வெளியான படத்தின் டீசர் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ட்ரெய்லர் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    ட்ரெய்லர் வெளியான அடுத்த வாரத்தில் கோப்ரா படம் உலகம் முழுவதும் ரிலீசாக உள்ளது. கோப்ரா படத்தை தொடர்ந்து  மீண்டும் அஜய் ஞானமுத்து இயக்கும் படத்தில் விக்ரம் இணையவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Musthak
    First published:

    Tags: Cobra Movie

    அடுத்த செய்தி