Home /News /entertainment /

ரசிகர்களை வெயிட்டிங்கில் வைக்காத நயன்தாரா - விக்னேஷ் சிவன்... சூப்பர் ஹிட் பாடல் ரிலீஸ்

ரசிகர்களை வெயிட்டிங்கில் வைக்காத நயன்தாரா - விக்னேஷ் சிவன்... சூப்பர் ஹிட் பாடல் ரிலீஸ்

நயன்தாரா - விக்னேஷ் சிவன்

நயன்தாரா - விக்னேஷ் சிவன்

பீஸ்ட்டை போல் இல்லாமல் நெகடிவ் விமர்சனங்களை காத்துவாக்குல ரெண்டு காதல் படம் பெரும்பாலும் தவிர்த்துள்ளது.

2015-ல் வெளியான நானும் ரவுடிதான் படத்தின் போது இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும், ஹீரோயின் நயன்தாராவுக்கும் ஏற்பட்ட நட்பு பின்னாளில் காதலாக மாறியது. இருவரும் நெருங்கிப் பழகி வரும் நிலையில், திருமணம் எப்போது என்ற கேள்வி கடந்த சில ஆண்டுகளாக இருவரிடமும் கேட்கப்பட்டு வருகிறது.

ஆனால் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் தொடர்ச்சியாக சினிமா ப்ரொஜெக்டுகளை வெற்றிகரமாக முடித்து வருகின்றனர். இருவரும் இணைந்து 'ரவுடி பிக்சர்ஸ்' என்ற பேனரில் படங்களை தயாரிக்கின்றனர்.

முன்னணி ஹீரோக்களுடன் நயன்தாரா ஜோடி போட்டு வரும் நிலையில், விக்னேஷ் சிவன் அஜித் அடுத்ததாக நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார். லைகா தயாரிக்கும் இந்தப் படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடிப்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க - நயன்தாரா விக்னேஷ் சிவன் ஷீரடி சாய் பாபாவுக்கு நன்றி தெரிவிக்கும் பயணம்! 

இந்நிலையில் கடந்த வாரம் வெளியான ரவுடி பிக்சர்ஸின் காத்துவாக்குல ரெண்டு காதல் படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. பீஸ்ட்டை போல் இல்லாமல் நெகடிவ் விமர்சனங்களை இந்தப் படம் பெரும்பாலும் தவிர்த்துள்ளது.

ரசிகர்கள் எதிர்பார்க்காத நிலையில், காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் சூப்பர் ஹிட்டான 'டூ டூ டூ' வீடியோ பாடலை தயாரிப்பாளர்களான நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் வெளியிட்டனர். இந்த பாடல் தற்போது வியூஸ்களையும் லைக்ஸையும் குவித்து வருகிறது.

இதையும் படிங்க - AK61: அஜித்தின் AK61 படத்தில் மஞ்சு வாரியர்!

கடந்த மாதம் வெளியான பீஸ்ட் படத்தில் இடம்பெற்றுள்ள அரபிக் குத்து வீடியோ பாடலை வெளியிடுமாறு ரசிகர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், ரசிகர்கள் கேட்காமலேயே கடந்த வாரம் வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் படத்திலிருந்து டூடூடூ பாடல் வெளியிடப்பட்டுள்ளது.



காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாகவும், அவருக்கு ஜோடியாக நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு பெரும் பலமாக அமைந்துள்ளது.

இதையும் படிங்க - சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு' முதல் பாடல் வெளியீடு அறிவிப்பு...

விக்னேஷ் சிவன் இயக்கும் அஜித்தின் அடுத்த படத்திற்கும் அனிருத் இசையமைக்கிறார். இந்தக் கூட்டணி தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருவதால் அஜித் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
Published by:Musthak
First published:

Tags: Nayanthara, Vignesh Shivan

அடுத்த செய்தி