முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / நேரடியாக ஓடிடியில் வெளியாகும் பன்றிக்கு நன்றி சொல்லி...!

நேரடியாக ஓடிடியில் வெளியாகும் பன்றிக்கு நன்றி சொல்லி...!

பன்றிக்கு நன்றி சொல்லி

பன்றிக்கு நன்றி சொல்லி

திரைப்படத்தை காண ரசிகர்களைவிட திரையுலகினர் ஆவலாக உள்ளனர். சமீபத்தில் அதிக திரைப்படங்களை நேரடியாக வெளியிடும் சோனிலிவ் ஓடிடி தளம் பன்றிக்கு நன்றி சொல்லி திரைப்படத்தை வாங்கியுள்ளது.

  • Last Updated :

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றான பன்றிக்கு நன்றி சொல்லி பிப்ரவரி 4-ஆம் தேதி நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது.

வித்தியாசமான கதைக்களத்தில் அமைந்த திரைப்படங்கள் தமிழில் தொடர்ச்சியாக வெளிவருகின்றன. சென்ற வருடம் வெளிவந்த ராக்கி , கடைசீல பிரியாணி திரைப்படங்கள் ரசிகர்களுக்கு புதுவித அனுபவத்தை தந்த படங்களாக அமைந்தன. அதே போன்ற வித்தியாசமான கதைக் களத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம்தான் பன்றிக்கு நன்றி சொல்லி. இந்தப் படத்தை பாலா அரன் என்பவர் எழுதி இயக்கியுள்ளார். சூதுகவ்வும், காதலும் கடந்து போகும் திரைப்படங்களை இயக்கிய நலன் குமாரசாமிதான் இந்த திரைப்படத்திற்கு பின்னிருக்கும் சூத்திரதாரி.

பன்றிக்கு நன்றி சொல்லி திரைப்படம் புதையல் வேட்டையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. இரண்டு கோடி பணமும், ஒரு புராதன சிலையும் தேடி சிலர் நடத்துகிற வேட்டைதான் பன்றிக்கு நன்றி சொல்லி கதை. விறுவிறுப்பான கதையும் காட்சிகளும் வசனங்களும் அபத்த நகைச்சுவையும் கலந்து இந்த படத்தை பாலா அரன் எடுத்துள்ளார்.

Also read... ஹன்சிகாவின் நாயகி மைய திரைப்படம் - தயாரிப்பாளர் யார் தெரியுமா?

திரைப்படத்தை காண ரசிகர்களைவிட திரையுலகினர் ஆவலாக உள்ளனர். சமீபத்தில் அதிக திரைப்படங்களை நேரடியாக வெளியிடும் சோனிலிவ் ஓடிடி தளம் பன்றிக்கு நன்றி சொல்லி திரைப்படத்தை வாங்கியுள்ளது. இவர்கள் வரும் பிப்ரவரி 4-ஆம் தேதி இந்தப் படத்தை வெளியிடுகின்றனர். இந்தப் படத்தில் ஜோமல்லூரி, விஜய் சத்யா, நிஷாந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். புதுவருடத்தில் ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும் திரைப்படமாக பன்றிக்கு நன்றி சொல்லி இருக்கும் என்கிறார் இயக்குனர் பாலா அரன்.

top videos
    First published:

    Tags: Entertainment