ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

திகிலூட்டும் காட்சிகளுடன் வெளியானது பிசாசு 2 டீசர்.. ஆண்ட்ரியா மிரட்டல்

திகிலூட்டும் காட்சிகளுடன் வெளியானது பிசாசு 2 டீசர்.. ஆண்ட்ரியா மிரட்டல்

பிசாசு 2 படத்தில் ஆண்ட்ரியா - விஜய் சேதுபதி

பிசாசு 2 படத்தில் ஆண்ட்ரியா - விஜய் சேதுபதி

கதைக் களம் என்னவென்று யூகிக்க முடியாத வகையில், சஸ்பென்ஸ் நிறைந்ததாக டீசர் கட் செய்யப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள பிசாசு 2 படத்தின் டீசர் தற்போது வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.

கடந்த 2014-ல் வெளியான பிசாசு திரைப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. இதையடுத்து படத்தின் 2ம் பாகம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு ஷூட்டிங் நடைபெற்று வந்த நிலையில் இன்று படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

டீசரில் வசனங்கள் ஏதுமின்றி காட்சிகள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. கவுரவ தோற்றத்தில் விஜய் சேதுபதி பிசாசு 2 படத்தில் நடித்துள்ளார்.

இதையும் படிங்க - Actress Tamannah Bhatia : நடிகை தமன்னாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் வைரல்..

கதைக் களம் என்னவென்று யூகிக்க முடியாத வகையில், சஸ்பென்ஸ் நிறைந்ததாக டீசர் கட் செய்யப்பட்டுள்ளது.  குறிப்பாக கார்த்திக் ராஜாவின் பின்னணி இசை மிரட்டலாக அமைந்துள்ளது.

பிசாசு 2 டீசர்

' isDesktop="true" id="738320" youtubeid="fMQO59-5dw4" category="cinema">

இந்தப் படத்தில் ஆண்ட்ரியாவின் நடிப்பு குறித்து சமீபத்தில் பேட்டி அளித்திருந்த மிஷ்கின், 3 ஆண்களுக்கு நிகராக ஆண்ட்ரியா நடித்திருப்பதாக பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க - அஜித் பிறந்தநாளையொட்டி வெளியாகிறது AK61 படத்தின் டைட்டில்...

மிஷ்கின் இயக்கிய துப்பறிவாளன் படத்திலும் ஆண்ட்ரியா முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.

அழகிய பாடகியான ஆண்ட்ரியா தமிழில் பச்சைக் கிளி முத்துச் சரம் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனார். தொடர்ந்து போல்டான கேரக்டர்களில் ஆண்ட்ரியா நடித்து வருகிறார்.

தரமணி, வடசென்னை உள்ளிட்ட படங்களில் இவரது நடிப்பு அதிக பாராட்டுக்களை பெற்றது. மேக்கிங் மற்றும் திரைக்கதையில் மிஷ்கின் கலக்குவார் என்பதால் பிசாசு 2 திரைப்படமும் பெரும் வெற்றியை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

First published:

Tags: Andrea Jeramiah, Director mysskin