Home /News /entertainment /

சரவணனின் தி லெஜெண்ட் படத்திலிருந்து வீடியோ பாடல் வெளியீடு…

சரவணனின் தி லெஜெண்ட் படத்திலிருந்து வீடியோ பாடல் வெளியீடு…

சரவணன் - ஊர்வசி ரவுத்தலா

சரவணன் - ஊர்வசி ரவுத்தலா

பாடலில் விஞ்ஞானி, ஜிம் மேனி என லெஜெண்ட் சரவணனை புகழ்ந்து வரிகள் எழுதப்பட்டுள்ளன. இந்த பாடலை மதன் கார்க்கி எழுதியுள்ளார்.

    சரவணன் நடித்துள்ள தி லெஜெண்ட் படத்திலிருந்து ரொமாண்டிக் வீடியோ பாடல் வெளியாகி அதிக விருப்பங்களை பெற்று வருகிறது.

    தொழிலதிபர் சரவணா ஸ்டோர் சரவணன் தி லெஜன்ட் என்ற திரைப்படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார். ஜேடி - ஜெர்ரி இயக்கியுள்ளனர். அந்த திரைப்படத்திற்கு ஹாரிஷ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார்.

    மிக பிரம்மாண்டமான பொருட் செலவில் எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகின. இந்த நிலையில் படத்தை ஜூலை மாதம் வெளியிட பட குழுவினர் திட்டமிட்டிருந்தனர்.

    'The Legend' ரிலீஸ் உரிமத்தை கைப்பற்றிய பிரபல முன்னணி நிறுவனம்

    அதற்கான வேலைகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் தி லெஜன்ட் திரைப்படம் ஜூலை 28ஆம் தேதி திரையரங்குகள் வெளியாகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தப் படத்தை தமிழகத்தில் மதுரை அன்புச் செழியன் வெளியிடுகிறார்.

    இந்த திரைப்படத்தில் சரவணனுடன் இந்தி முன்னணி நடிககை  ஊர்வசி ரவுத்தலா  நாயகியாக நடித்துள்ளார்.  அதேபோல் மறைந்த நடிகர் விவேக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    திரையரங்குகளில் வெளியாகும் சூர்யாவின் சூரரைப்போற்று, ஜெய் பீம்! 

    இந்நிலையில் படத்தில் இடம்பெற்றுள்ள ரொமாண்டிக் பாடலான போ போ போ வீடியோ பாடல் தற்போது வெளியாகியுள்ளது.



    பாடலில் விஞ்ஞானி, ஜிம் மேனி என லெஜெண்ட் சரவணனை புகழ்ந்து வரிகள் எழுதப்பட்டுள்ளன. இந்த பாடலை மதன் கார்க்கி எழுதியுள்ளார். தினேஷ் இந்த பாடலுக்கு நடன காட்சியை வடிவமைத்துள்ளார். வெளிநாட்டில் படமாக்கப்பட்டுள்ள இந்த பாடல் காட்சியில், நடிகை ஊர்வசி ரவுத்தலாவுடன் கலக்கலான டான்ஸ் ஆடியுள்ளார் சரவணன்.



    ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இந்த படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் அனைத்தும் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
    Published by:Musthak
    First published:

    Tags: Kollywood

    அடுத்த செய்தி