முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / விஷால் படத்தின் ஷூட்டிங்கில் மீண்டும் விபத்து… மருத்துவனையில் ஒருவர் அனுமதி

விஷால் படத்தின் ஷூட்டிங்கில் மீண்டும் விபத்து… மருத்துவனையில் ஒருவர் அனுமதி

ஈ.வி.பி. பிலிம் சிட்டி - விஷால்

ஈ.வி.பி. பிலிம் சிட்டி - விஷால்

ஈவிபி பிலிம் சிட்டியில் மார்க் ஆண்டனி படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வந்தது. அப்போது, லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து படத்தின் செட் மீது மோதி நிற்காமல் சென்றது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

விஷால் நடித்து வரும் மார்க் ஆன்டனி படத்தின் ஷூட்டிங்கின்போது மீண்டும் விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்ட நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து கோலிவுட்டில் பரபரப்பு காணப்படுகிறது. லத்தி படத்தை தொடர்ந்து விஷால் தற்போது மார்க் ஆன்டனி என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருடன் எஸ்.ஜே. சூர்யா, ரிது வர்மா, சுனில் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஆதிக் ரவிச்சந்திரன் இந்த படத்தை இயக்கி வருகிறார்.

விஷாலின் 33ஆவது படமாக மார்க் ஆண்டனி உருவாகி வருகிறது. இதனை தென்னிந்திய மொழிகளுடன், இந்தியிலும் சேர்த்து பான் இந்தியா படமாக வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பாக சென்னைக்கு அருகே ஈவிபி பிலிம் சிட்டியில் மார்க் ஆண்டனி படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வந்தது. அப்போது, லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து படத்தின் செட் மீது மோதி நிற்காமல் சென்றது. அந்த அரங்கில் சுமார்100 பேர் இருந்த நிலையில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் விபத்து ஏற்படவில்லை.

இந்நிலையில் அடுத்ததொரு விபத்தாக மார்க் ஆண்டனி படத்தின் ஷூட்டிங்கில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. ஈவிபி பிலிம் சிட்டியில் நடந்த ஷூட்டிங்கின்போது லைட்மேன் ஒருவரின் தலையில் லைட் கம்பம் விழுந்திருக்கிறது. இதில் நெற்றியில் காயம் அடைந்த அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அடுத்தடுத்து மார்க் ஆண்டனி படப்பிடிப்பு விபத்து நடந்து வருவது கோலிவுட்டில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

First published:

Tags: Vishal