முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / சுதந்திர தினத்தை முன்னிட்டு ரஜினி – விஜய் வீடுகளில் பறக்கும் தேசியக் கொடி…

சுதந்திர தினத்தை முன்னிட்டு ரஜினி – விஜய் வீடுகளில் பறக்கும் தேசியக் கொடி…

ரஜினி - விஜய் வீடுகளில் ஏற்றப்பட்டுள்ள தேசியக்கொடி.

ரஜினி - விஜய் வீடுகளில் ஏற்றப்பட்டுள்ள தேசியக்கொடி.

இன்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள ரஜினிகாந்த், அனைவரும் தங்களது வீட்டில் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.

  • Last Updated :

சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த் மற்றும் விஜய் வீடுகளில் தேசியக் கொடி பறக்கவிடப்பட்டுள்ளது. அவர்களைப் பின்பற்றி ரசிகர்களும் தேசியக் கொடியை தங்களது வீடுகளில் பறக்கவிடத் தொடங்கியுள்ளார்கள்.

இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை நாடு முழுவதும் கொண்டாடும் வகையில் அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி என்பதற்கேற்ப வரும் 13ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை ஒவ்வொருவரின் வீட்டிலும் தேசியக்கொடி பறக்க விடப்பட வேண்டும் என பிரதமர் நரேந்திர பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதனையேற்று பொதுமக்களும், பிரபலங்களும் தங்களது வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றி வருகின்றனர்.

Actress Sridevi : நடிகை ஸ்ரீதேவி குறித்து ரசிகர்கள் அதிகம் அறிந்திடாத தகவல்கள்….

அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் வீட்டிலும் தேசியக் கொடி ஏற்றப்பட்டுள்ளது.

கே.ஜி.எஃப்.2 இயக்குனர் – பாகுபலி பிரபாஸ் இணையும் சலார் படத்தின் அப்டேட்…

இந்நிலையில் இன்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள ரஜினிகாந்த், அனைவரும் தங்களது வீட்டில் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருந்த வீடியோவில், எத்தனையோ பேர் அவர்களோட உயிரை தியாகம் பண்ணிருக்காங்க. அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக வரும் 15ம்தேதி சாதி மத கட்சி வேறுபாடு இல்லாமல் நாம எல்லோரும் இந்தியர்கள் என்ற உணர்வோடு தேசியக் கொடியைக் கட்டி பெருமைப்படுவோம். என்று கூறியிருந்தார்.

ரஜினியின் வீட்டைத் தொடர்ந்து ஈ.சி.ஆர் பனையூரில் அமைந்திருக்கும் விஜய்யின் வீட்டிலும் தேசியக்கொடி பறக்க விடப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் தங்களது வீடுகளில் தேசியக் கொடியை பறக்க விட்டுள்ளார்கள். இதனை அவர்களது ரசிகர்களும் பின்பற்றத் தொடங்கியுள்ளனர்.

First published:

Tags: Actor Vijay, Rajinikanth