சன்னி லியோன் நடிப்பில் ஹாரர் காமெடிப் படம் ஒன்று தமிழில் தயாராகிறது. இதற்கு ஓஎம்ஜி (ஓ மை கோஸ்ட்) என பெயர் வைத்துள்ளனர்.
முன்னாள் நீலப்பட நடிகையான சன்னி லியோன் , அந்தத் தொழிலைவிட்டு , இந்திப் படங்களில் நடிக்க ஆரம்பித்தார் . கவர்ச்சி வேடங்களுக்கு அவரை இந்தி சினிமா பயன்படுத்தியது . தமிழில் வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடினார் . இதேபோல் மலையாளத்தில் மம்முட்டி படத்தில் ஒரு பாடலுக்கு ஆடினார் .
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
சன்னி லியோனின் முந்தைய நீலப்பட இமேஜ் மாறிய நிலையில் , அவரை வைத்து தமிழில் இரு படங்களை தொடங்கினார் இயக்குனர் வடிவுடையான் . அந்தப் படங்கள் என்னானது என்று தெரியவில்லை . மலையாளத்தில் இந்த கொரோனா காலகட்டத்தில் ஷீரோ என்ற மலையாளப் படத்தில் நடித்தார் . விரைவில் இப்படம் ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது .
Also read... கதைத் திருட்டு புகாரில் ஷங்கரின் தெலுங்குப் படம்...?
தமிழில் அவர் புதிதாக ஒப்புக் கொண்டிருக்கும் படம் ஓஎம்ஜி . இந்தப் படத்தில் சதீஷ் , தர்ஷா குப்தா , மொட்ட ராஜேந்திரன் , ராணி திலக் உள்ளிட்டவர்கள் நடிக்கின்றனர் . சரித்திரப் பின்னணியில் எடுக்கப்படும் ஹாரர் காமெடி திரைப்படமாக இது உருவாகிறது . ஆர் . யுவன் என்பவர் படத்தை இயக்க , ஜாவித் ரியாஸ் இசையமைக்கிறார் . வீரசக்தி , சசிகுமார் இருவரும் இணைந்து படத்தை தயாரிக்கின்றனர் . Published by: Vinothini Aandisamy
First published: September 02, 2021, 11:05 IST
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.