என்னடா பண்ணி வெச்சிருக்கீங்க..?... ஒளியும் ஒலியும் வீடியோ பாடல் வெளியீடு

என்னடா பண்ணி வெச்சிருக்கீங்க..?... ஒளியும் ஒலியும் வீடியோ பாடல் வெளியீடு
கோமாளி
  • News18
  • Last Updated: September 4, 2019, 11:49 AM IST
  • Share this:
கோமாளி படத்தில் இடம்பெற்ற ஒளியும் ஒலியும் பாடல் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால் ஆகியோர் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியான திரைப்படம் கோமாளி.

16 ஆண்டுகள் கோமாவில் இருந்த இளைஞன் இடைப்பட்ட காலத்தில் ஏற்பட்ட நவீன மாற்றங்களை வியப்புடன் பார்ப்பதை வேடிக்கையாக சொல்லி உள்ள கோமாளி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்தது.


இந்தப்படம் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான திரைப்படங்களிலேயே அதிக அளவில் வசூலை பெற்ற திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

சென்னையில் மட்டும் ரூ.5 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது ஹிப் ஹாப் ஆதி இசையில் கோமாளி படத்தில் இடம்பெற்ற ஒளியும் ஒலியும் பாடலின் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்

Loading...

First published: September 4, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...