Home /News /entertainment /

உதயநிதியின் சினிமா கெரியரை உதயமாக்கிய ‘ ஒரு கல் ஒரு கண்ணாடி’!

உதயநிதியின் சினிமா கெரியரை உதயமாக்கிய ‘ ஒரு கல் ஒரு கண்ணாடி’!

ஒரு கல் ஒரு கண்ணாடி

ஒரு கல் ஒரு கண்ணாடி

ஹீரோயினை துரத்தி துரத்தி காதலிக்கும் வேலையை முழு நேரம் செய்யும் ஹீரோவாக உதயநிதி இன்றைய இளம் ஹீரோக்களுக்கே சவால் ஆனார்.

  உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக அறிமுகமான 'ஒரு கல் ஒரு கண்ணாடி’ திரைப்படம் வெளிவந்து 10 வருடங்களை கடந்துவிட்ட நிலையில் அப்படத்தினைப் பற்றிய சிறப்பு பதிவு.

  தயாரிப்பாளராக இருந்த உதயநிதி கதாநாயகனாக அறிமுகமான முதல் திரைப்படம் ’ஒரு கல் ஒரு கண்ணாடி’ . உதயநிதி, காமெடி மன்னன் சந்தானம், இயக்குநர் ராஜேஷின் கலக்கல் காம்பினேஷனில் 2012 இல் வெளிவந்த இத்திரைப்படம் காதலை நகைச்சுவையாக சொல்லியது. இயக்குனர் ராஜேஷின் முந்தைய படங்களான ’சிவா மனசுல சக்தி’, ’பாஸ் என்கிற பாஸ்கரன்’ போன்ற படங்களின் பாணியிலேயே வசனங்களும் திரைக்கதையும் அமைந்து 'ஓகே ஓகே' வை ஓகே ஆக்கியது.

  நீண்ட வருடம் கழித்து சன் டிவி சீரியலில் நடிக்க வரும் ரஜினி பட நடிகர்!

  ஒரு கல் ஒரு கண்ணாடியை உடையாமல் மோதிக் காதலிக்கும் இத்திரைப்படத்தின் கதையில் ஹீரோயினை துரத்தி துரத்தி காதலிக்கும் வேலையை முழு நேரம் செய்யும் ஹீரோவாக உதயநிதி அன்றைய இளம் ஹீரோக்களுக்கே சவால் ஆனார். மதுபாட்டிலை முகர்ந்து பார்த்தே போதையேற்றிக் கொள்ளும் பாத்திரத்தில் தன் இயல்பான நடிப்பில் அப்படியே பொருந்தி தமிழ் சினிமாவின் கதாநாயகர்கள் கணக்கை ஒன்று கூட்டினார்.

  ok ok Oru Kal Oru Kannadi movie super hit for udhayamidhi stalin and santhanam comdey

   

  படத்தின் ரியல் ஹீரோ ‘சந்தானம்’ என சொல்லும் அளவில் காட்சிக்கு காட்சி காமடியில் சிக்சர் அடித்தார் சந்தானம். ஆந்திரா ஸ்டைல் ஹீரோ கெட்டப் உடைகளில் படம் முழுக்க வலம் வந்து பல மாடுலேஷன்களில் பேசி பட்டையை கிளப்பினார் சந்தானம்.

  இணையத்தில் தீயாய் பரவும் தகவல்.. விஜய்டிவி மாகாபாவின் சொத்து இத்தனை கோடியா?

  காதலுக்காக உதயநிதி தன்னை அடிக்கடி பந்தாடுவதில் காவி உடுத்தி சன்னியாசி ஆகி பின் காதலியை கண்டதும் ஜகா வாங்குவது… திருவல்லிக்கேணி பார்த்தாவாகக் குளறல் ஆங்கிலம் பேசுவது…. திருமண மண்டபத்தில் உதயநிதி பேசும் ஆங்கிலத்தை மொழிபெயர்ப்பது என தன் பாடி லாங்குவேஜில் எல்லோரையும் பின்னுக்கு தள்ளிய சந்தானம் ஜானவாச கார் ஓட்டுனராக, அக்ரஹாரத்து பார்த்தசாரதியாக, 'தேன்ன்ன்ன்ன்ன் அடை’ காதலனாக இத்திரைப்படம் முழுவதும் காமெடியை வாரி இறைத்தார்.

  ‘சின்ன குஷ்பு’ ஹன்சிகா….. உதயநிதியின் அம்மாவாக வந்த சரண்யா பொன்வண்ணன்,.. 'இன்று திருமண நாள். இது எனக்கு இன்னுமொரு கறுப்பு தினம்’ என்று போர்டில் எழுதி, மனைவியிடம் வெறுப்பை உமிழும் கணவராக அழகம்பெருமாள்…. ஹன்சிகாவின் அப்பாவாக வந்த ஷாயாஜி ஷிண்டே அனைத்து பாத்திரங்களும் சிறப்பாக நடித்து ஒரு கல்லால் கண்ணாடியை உடையாமல் பார்த்து கொண்டனர். அதோடு ஹாரிஸ் ஜெயராஜின் 'வேணாம் மச்சான் வேணாம் இந்த பொன்னுங்க காதலு' பாடல் அப்போதைய தேவதாஸ்களின் காலர் டியூனானது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Sreeja
  First published:

  Tags: Actor Santhanam, Kollywood, Tamil Cinema, Udhayanidhi Stalin

  அடுத்த செய்தி