விஜய் சேதுபதி - அசோக் செல்வன் காம்போவில் ‘ஓ மை கடவுளே’ டீசர் - வீடியோ

விஜய் சேதுபதி - அசோக் செல்வன் காம்போவில் ‘ஓ மை கடவுளே’ டீசர் - வீடியோ
ஓ மை கடவுளே படத்தில் விஜய் சேதுபதி
  • News18
  • Last Updated: October 17, 2019, 6:00 PM IST
  • Share this:
‘ஓ மை கடவுளே’ படத்தின் டீசரை நடிகர் விஜய்சேதுபதி மற்றும் இயக்குநர் கவுதம் மேனன் ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங் நடித்துள்ள படம் ‘ஓ மை கடவுளே’. மேலும் இந்தப் படத்தில் பிரபல டிவி நடிகை வாணி போஜனும் இணைந்திருந்தார். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க படக்குழு விஜய் சேதுபதியை அணுகியுள்ளது.

படத்தின் கதையைக் கேட்ட உடனே ஒப்புக் கொண்டு படப்பிடிப்புக்கு வந்து நடித்துக் கொடுத்துள்ளார் விஜய்சேதுபதி.


இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் படத்தின் டீசரை விஜய் சேதுபதி மற்றும் கவுதம் மேனன் ஆகியோர் வெளியிட்டுள்ளனர். லியோன் ஜேம்ஸ் இசையில் படத்தின் பாடல்கள் சிறப்பாக வந்திருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.

முன்னதாக விஜய் சேதுபதி - அசோக் செல்வன் இணைந்து சூதுகவ்வும், ஆரஞ்சு மிட்டாய் ஆகிய இரண்டு படங்களில் நடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

பார்க்க: பிறந்த நாளில் கர்ப்பிணி லுக்கில் கீர்த்தி சுரேஷ்...!

First published: October 17, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading