Home /News /entertainment /

அருண் விஜய் படத்தைப் பார்க்க ஆர்வமாக இருக்கிறேன் - தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ட்வீட்!

அருண் விஜய் படத்தைப் பார்க்க ஆர்வமாக இருக்கிறேன் - தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ட்வீட்!

ஓ மை டாக்

ஓ மை டாக்

நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் ஓ மை டாக் திரைப்படத்தை தயாரித்துள்ளது.

    நடிகர் அருண் விஜய்யின் ஓ மை டாக் படத்தைப் பார்க்க தான் ஆர்வமாக இருப்பதாக முன்னாள் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ஜாண்டி ரோட்ஸ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

    நடிகர் அருண் விஜய்யின் மகன் அர்னவ் விஜய் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ள Oh my dog நடித்துள்ள என்ற குழந்தைகள் திரைப்படத்தை அமேசான் பிரைம் வலைதளத்தில் இன்று வெளியாகியுள்ளது. சண்முகம் இயக்கியுள்ள இந்த படத்தில் மஹிமா நம்பியார், அருண் விஜய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அர்னவிற்கு தந்தையாக இதில் அருண் விஜய்யே நடித்துள்ளார். சிறுவனுக்கும் அவன் வளர்க்கும் நாய்க்கும் இடையேயான பாசப்பிணைப்பு தான் கதைக்களம்.

    நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் ஓ மை டாக் திரைப்படத்தை தயாரித்துள்ளது. பொன்மகள் வந்தாள், சூரரைப்போற்று, ஜெய்பீம், உடன் பிறப்பே, ராம ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் உள்ளிட்ட திரைப்படங்களை தொடர்ந்து சூர்யா தயாரிப்பில் அமேசான் தளத்தில் வெளியிடும் திரைப்படமாக இந்த திரைப்படம் வெளிவந்துள்ளது.

    இஸ்ரேலில் வெளியாகும் தி காஷ்மீர் ஃபைல்ஸ்!



    இந்நிலையில் ஒரு செல்லப்பிராணி காதலராக ஓ மை டாக் படத்தைப் பார்க்க தான் ஆர்வமாக இருப்பதாக முன்னாள் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ஜாண்டி ரோட்ஸ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Actor Arun Vijay, Actor Suriya

    அடுத்த செய்தி