ஓடிசாவை சேர்ந்த பிண்டு நந்தா கல்லீரல் பாதிப்பு காரணமாக புதுடெல்லியில் உள்ள கல்லீரல் மற்றும் பிலியரி சயின்ஸ் நிறுவனத்தத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக்கொண்டார். அவருக்கு கல்லீரல மாறறு அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைத்திருக்கின்றனர்.
ஆனால் அவருக்கு உடனடியாக உறுப்பு கிடைக்காமல் ஹைதராபாத்தில் உள்ள யசோதா மருத்துவமனையில் நடிகர் பிண்டு நந்தா அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து பிண்டு நந்தாவிற்கு அவரது உறவினர் கல்லீரல் தானம் அளிக்க முன்வந்தார். இதனையடுத்து அவருக்கு உறுப்பு தான அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி பிண்டு நந்தா உயிரிழந்திருக்கிறார்.
அவருக்கு இரத்தம் ஒவ்வாமை உள்ளிட்ட காரணங்களால் சிகிச்சை பிண்டு நந்தா உயரிழந்ததாக கூறப்படுகிறது. அவரது மறைவு ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
தொலைக்காட்சி தொடர்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமான பிண்டு நந்தா கடந்த 1996 ஆம் ஆண்டு முதல் திரைப்படங்களில் நடித்துவருகிறார். இதுவரை 50க்கும் மேற்பட்ட படங்களில் அவர் ஹீரோவா நடித்திருக்கிறார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Liver Disease