தீரன் அதிகாரம் ஒன்று, வெற்றிவேல், கோமாளி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் பிரவீனா. ராஜா- ராணி, பிரியமானவள் உள்பட தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். கேரளாவைச் சேர்ந்த இவர் மலையாள திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். ஏற்கனவே கடந்த வருடம் பிரவீனாவை ஆபசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் வெளியானது. இதுபற்றி அவர் அளித்த புகாரின் பேரில் பாக்யராஜ் என்பவரை டெல்லியில் கைது செய்தனர். ஒரு மாதம் சிறையில் இருந்த அவர் பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்த நிலையில் பிரவீனாவோடு, அவரது மகளின் புகைப்படங்களும் ஆபாசமாக சித்தரிக்கப்பட்டு மீண்டும் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டன. இதனால் அதிர்ச்சியடைந்த பிரவீனா கேரள சைபர் கிரைமில் தனது மகளுடன் சென்று மீண்டும் புகார் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், “சிறையில் வெளியே வந்த அந்த நபர் என்னை பழிவாங்கும் நோக்கத்தோடு செயல்பட்டு எனது புகைப்படத்தையும், குடும்பத்தினர் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிடுகிறார். என்னுடைய மகளின் புகைப்படங்களையும் கூட மார்பிங் செய்து பலருக்கும் அனுப்பி வருகிறார்.
எனது பெயரில் நூற்றுக்கணக்கான போலி சமூக வலைதளக் கணக்குகளையும் வைத்துள்ளார். இவ்வளவு வக்கிரமாகவும், மனநோயாளியாகவும் யாராவது இருக்க முடியுமா?. காவல் துறை இதுபற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.