ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

‘தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரம்’ - விஜய்க்கு சீமான் பிறந்த நாள் வாழ்த்து

‘தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரம்’ - விஜய்க்கு சீமான் பிறந்த நாள் வாழ்த்து

சீமான் - விஜய்

சீமான் - விஜய்

Seeman on Vijay : தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரம் என்று குறிப்பிட்டு அவரை சீமான் வாழ்த்தியிருக்கும் பதிவு வைரலாகியுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரம் என்று விஜய்யை பாராட்டி அவருக்கு பிறந்த நாள் வாழ்த்தை சீமான் கூறியுள்ளார்.

விஜய் தனது 48வது பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகிறார். இதையொட்டி, திரையுலகத்தினர், பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

விஜய் மக்கள் இயக்கம் சார்பாக தமிழகம் முழுவதும் நல உதவிகள் வழங்கப்படுகிறது. இதேபோன்று விஜய்யை வாழ்த்து போஸ்டர்கள் இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணப்பாளரும், இயக்குனருமான சீமான் விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Also read... நடிகர் விஜய் பாடிய பாடல்கள் ஒரு லிஸ்ட்! 

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில், ‘தனது இயல்பான நடிப்பாலும், நளினமான நடனத்தாலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்துத்தரப்பு மக்களின் உள்ளங்களையும் கவர்ந்து தமிழ்த்திரையுலகின் உச்ச நட்சத்திரமாக மிளிரும் அன்புத்தம்பி விஜய் அவர்களுக்கு எனது உளம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள்!’ என்று வாழ்த்தியுள்ளார்.

தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரம் என்று குறிப்பிட்டு அவரை சீமான் வாழ்த்தியிருக்கும் பதிவு வைரலாகியுள்ளது.

இதையும் படிங்க - HBD Vijay: பிரியங்கா சோப்ரா டூ கத்ரீனா கைஃப்... விஜய்யுடன் ஜோடி போட்ட பாலிவுட் நடிகைகள் 

இதேபோன்று, நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், நடிகர் விஜயை தொலைபேசியில் தொடர்புகொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சிறிது நேரம் பேசிய அவர்கள் சினிமா துறை மற்றும் நிலை குறித்தும் பேசியுள்ளனர் என கூறப்படுகிறது. அதேபோல் நடிகர் விஜய், கமல்ஹாசனுக்கு விக்ரம் திரைப்பட வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தார் எனவும் கூறப்படுகிறது.

நடிகர் கமலஹாசன் தன்னுடைய தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் மூலம் நடிகர் விஜய்யை வைத்து ஒரு திரைப்படத்தை தயாரிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இதற்கான முதல் கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று முடிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

First published:

Tags: Actor Vijay, Seeman