Home /News /entertainment /

இனி அமேசானில் அனைத்து ஜேம்ஸ் பாண்ட் படங்களையும் பார்க்கலாம்

இனி அமேசானில் அனைத்து ஜேம்ஸ் பாண்ட் படங்களையும் பார்க்கலாம்

ஜேம்ஸ் பாண்ட் படங்கள்

ஜேம்ஸ் பாண்ட் படங்கள்

ஜேம்ஸ் பாண்ட் படங்களின் உரிமை உள்பட சுமார் 4000 படங்களின் உரிமை அமேசான் கைவசம் வந்தது. அத்துடன் 17,000 மணி நேர தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் உரிமையும் அமேசானுக்கு கிடைத்தது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
அமேசான் பிரைம் வீடியோ இதுவரை வெளியான 25 ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்களில் கடைசியாக வெளியான நோ டைம் டூ டை   தவிர அனைத்துப் படங்களையும் வெளியிட்டுள்ளது.

பிரிட்டனின் இயான் பிளம்மிங் உருவாக்கிய ஜேம்ஸ் பாண்ட் கற்பனை கதாபத்திரத்தை வைத்து 1962-ல் டாக்டர் நோ திரைப்படம் வெளியானது. அன்றிலிருந்து இப்போதுவரை 25 திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. ஜேம்ஸ் பாண்டாக ஷான் கானரி, ஜார்ஜ் லசன்பி, ரோஜர் மூர், திமோத்தி டால்டன், பியர்ஸ் பிராஸ்னன், டேனியல் க்ரேக் ஆகியோர் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான 25-வது படமான நோ டைம் டூ டை படமே தனது கடைசி ஜேம்ஸ் பாண்ட் படம் என டேனியர் கரேக் கூறியுள்ளார்.

இந்தப் படங்களை எம்ஜிஎம் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த வருட ஆரம்பத்தில் இந்த நிறுவனத்தை 8.45 பில்லியன் டாலர்களுக்கு அமேசான் பிரைம் வீடியோ வாங்கியது. இதன் மூலம் அவர்கள் கைவசம் இருந்த ஜேம்ஸ் பாண்ட் படங்களின் உரிமை உள்பட சுமார் 4000 படங்களின் உரிமை அமேசான் கைவசம் வந்தது. அத்துடன் 17,000 மணி நேர தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் உரிமையும் அமேசானுக்கு கிடைத்தது.

இசையின் மாயநதி.. ஆகாயத்தை தீ பிடிக்கச் செய்த கலைஞன் சந்தோஷ் நாராயணன்

அமேசான் பிரைம் வீடியோ நோ டைம் டூ டை படம் தவிர மற்ற 24 ஜேம்ஸ் பாண்ட் படங்களையும் தனது தளத்தில் வெளியிட்டுள்ளது. இதனால், பிரைம் சந்தாதாரர்கள் கூடுதல் கட்டணம் செலுத்தாமல் மொத்த ஜேம்ஸ் பாண்ட் படங்களையும் பார்த்து ரசிக்கலாம்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published:

Tags: Hollywood

அடுத்த செய்தி