ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

வரிசை கட்டும் தமிழ் படங்கள்.. நவம்பர் முதல் வாரம் திரைக்கு வரும் படங்கள் லிஸ்ட்!

வரிசை கட்டும் தமிழ் படங்கள்.. நவம்பர் முதல் வாரம் திரைக்கு வரும் படங்கள் லிஸ்ட்!

இந்த வாரம் திரைக்கு வரும் படங்கள்

இந்த வாரம் திரைக்கு வரும் படங்கள்

நம்பர் 4ஆம்தேதி வெள்ளியன்று 5 புதிய படங்கள் திரைக்கு வரவுள்ளன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    இந்த வாரம் வரும் 4ஆம் தேதி வெள்ளியன்று வெளியாகப் போகும் படங்களின் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்…

    ' isDesktop="true" id="828852" youtubeid="TeV1FNneuXg" category="cinema">

    காஃபி வித் காதல் – ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், மாளவிகா சர்மா, சம்யுக்தா, அம்ரிதா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சுந்தர் சி இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் காஃபி வித் காதல் உருவாகியுள்ளது. ரொமான்டிக் காமெடி ஜானரான இந்த படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடுகிறது.

    ' isDesktop="true" id="828852" youtubeid="JFwe0lgPDqA" category="cinema">

    நித்தம் ஒரு வானம் – அசோக் செல்வன், ரிது வர்மா, அபர்ணா பால முரளி, ஷிவாத்மிகா நடிப்பில் காதல் படமாக உருவாகியுள்ளது. படத்தின் ட்ரெய்லர் வரவேற்பை  பெற்றுள்ளது.

    ' isDesktop="true" id="828852" youtubeid="FaQe8JFGdaM" category="cinema">

    லவ் டுடே – ஜெயம் ரவி நடித்த கோமாளி படத்தின் இயக்குனர் பிரதீப் ஹீரோவாக இந்த படத்தில் நடித்திருக்கிறார். இவானா, யோகி பாபு, சத்யராஜ் உள்ளிட்டோர் படத்தில் இடம்பெற்றுள்ளனர். ஏ.ஜி.எஸ். தயாரிக்கும் இந்த படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடுகிறது.

    ' isDesktop="true" id="828852" youtubeid="9DGhM9na6AU" category="cinema">

    4554 – முருகா, கோழி கூவுது படங்களில் நடித்த அசோக் குமார் 4554 படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். படத்தின் டைட்டில் ஒரு காரின் நம்பராகும். காரை மையமாக வைத்து படம் உருவாக்கப்பட்டுள்ளது. போதிய புரொமோஷன் இல்லாததால் இந்தப் படம் அதிகம் கவனம் பெறவில்லை.

    ' isDesktop="true" id="828852" youtubeid="vV-jyr7DNsA" category="cinema">

    கண்டேன் உன்னை தந்தேன் என்னை – தங்கவேலு கண்ணன் இயக்கத்தில் முற்றிலும் புதுமுகங்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம். ரொமான்டிக் ஜானரில் வெளிவருகிறது.

    Published by:Musthak
    First published:

    Tags: Kollywood