Home /News /entertainment /

'ஆரோக்கியத்துக்கு மிஞ்சினது எதுவுமே கிடையாது' - சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து

'ஆரோக்கியத்துக்கு மிஞ்சினது எதுவுமே கிடையாது' - சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து

தனது வீட்டின் முன் குவிந்திருந்த ரசிகர்களை சந்தித்த ரஜினி காந்த், அவர்களுக்கு பொங்கல் வாழ்த்தை தெரிவித்தார்.

தனது வீட்டின் முன் குவிந்திருந்த ரசிகர்களை சந்தித்த ரஜினி காந்த், அவர்களுக்கு பொங்கல் வாழ்த்தை தெரிவித்தார்.

தனது வீட்டின் முன் குவிந்திருந்த ரசிகர்களை சந்தித்த ரஜினி காந்த், அவர்களுக்கு பொங்கல் வாழ்த்தை தெரிவித்தார்.

    பொங்கல் திருநாளையொட்டி, சினிமா நட்சத்திரங்கள் ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இன்றைய தேதியில், பெரிய பட்ஜெட் படங்கள் வெளியாகி இருக்க வேண்டிய நிலையில், மீண்டும் கொரோனா வந்ததால் வெளியீடு ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

    இருப்பினும், சிறிய பட்ஜெட் படங்கள் அதிக எண்ணிக்கையில் களம் இறக்கப்பட்டுள்ளன. இதேபோன்று பொங்கல் திருநாளையொட்டி, பல முக்கிய படங்களின் அப்டேட்டுகள் வெளியிடப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

    இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பொங்கல் வாழ்த்து வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது-

    அனைவருக்கும் வணக்கம். ஒரு கஷ்டமான, ஒரு ஆபத்தான சூழ்நிலையிலே வாழ்ந்திட்டிருக்கோம்.

    இந்த கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகமாகிட்டிருக்கு. இதுலேருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ள எல்லா கட்டுப்பாடுகளையும், எல்லா நியமங்களையும் கண்டிப்பா கடைபிடிங்க. ஆரோக்கியத்துக்கு மிஞ்சினது எதுவுமே கிடையாது. அனைவருக்கும் என்னுடைய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

    இவ்வாறு ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். கடந்த தீபாவளியையொட்டி திரைக்கு வந்த அண்ணாத்த திரைப்படம், ரஜினி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது. ரஜினியும் இயக்குனர் சிவா மற்றும் அவரது குழுவினரை நேரில் வரவைத்து, தங்க செயின் வழங்கி சிலாகித்து பேசியுள்ளார்.



    முன்னதாக, தனது வீட்டின் முன் குவிந்திருந்த ரசிகர்களை சந்தித்த ரஜினி காந்த், அவர்களுக்கு பொங்கல் வாழ்த்தை தெரிவித்தார். மீண்டும் இதே கூட்டணி இணையுமா என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. அதேநேரம், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் இயக்குனர் தேசிங்கு ராஜா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிப்பார் என்றும் பேசப்படுகிறது.

    இதையும் படிங்க : ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய விஜய்யின் பீஸ்ட் அப்டேட்!

    சமீபத்தில் வெளியான ரஜினி படங்களில் அவரது ரசிகர்களிடமும், சினிமா ரசிகர்களிடமும் பேட்ட படம்தான் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த படத்தின் ஸ்டைலை பின்பற்றித்தான், தர்பார், அண்ணாத்த படங்கள் எடுக்கப்பட்டன. இதனால், கார்த்திக் சுப்பராஜுடன் இணைந்து ரஜினி மீண்டும் படம் பண்ண வேண்டும் என்று ஏராளமான ரசிகர்கள் விரும்புகின்றனர்.

    இதையும் படிங்க : கைதி படத்தின் இந்தி ரீமேக் தொடக்கம்!

    தனது அடுத்த படம் குறித்து ரஜினிகாந்த் விரைவில் அறிவிப்பு வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வரும்போது, படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம்.
    Published by:Musthak
    First published:

    Tags: Pongal, Rajini Kanth

    அடுத்த செய்தி