வருமான வரித்துறை சோதனை பற்றி நடிகை டாப்சி அளித்த விளக்கம்...

வருமான வரித்துறை சோதனை பற்றி நடிகை டாப்சி அளித்த விளக்கம்...

நடிகை டாப்ஸி

வருமான வரித்துறை சோதனையில் தனது வீட்டில் இருந்து 5 கோடி ரூபாய்க்கான ஆவணம் கைப்பற்றப்பட்டதாக வெளியான தகவலை நடிகை டாப்சி மறுத்துள்ளார்.

 • Share this:
  தமிழில் ஆடுகளம், காஞ்சனா-2 உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமான டாப்சிக்கு சொந்தமான மும்பை வீடு உள்ளிட்ட இடங்களில் வருமானவரித்துறையினர் இரண்டு தினங்களுக்கு முன் சோதனை நடத்தினர். இதேபோன்று இமைக்கா நொடிகள் படத்தில் நடித்த பிரபல இயக்குநர் அனுராக் காஷ்யப், விகாஷ் ஆகியோர் இணைந்து நடத்திய படத்தயாரிப்பு மற்றும் வெளியீட்டு நிறுவனமான பேந்தம் பிலிம்ஸ் உட்பட 30 இடங்களில் சோதனை நடைபெற்றது. இதில் படத்தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து இயக்குநர், பங்குதாரர்களுக்கு பரிமாற்றப்பட்ட தொகையில் 350 கோடி ரூபாயை கணக்கில் காட்டாமல் மறைத்திருப்பது தெரியவந்துள்ளது.

  மேலும், 300 கோடி ரூபாய் முரண்பட்ட தொகை குறித்து படத்தயாரிப்பு நிறுவன ஊழியர்களால் விளக்கமளிக்க முடியவில்லை. அத்துடன், பாக்ஸ் ஆபிஸ் வசூலில் உண்மையான தொகையை மறைத்து கணக்கு காட்டியிருப்பதும் தெரியவந்துள்ளது. 5 கோடி ரூபாய் கணக்கில் வராத ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், காஷ்யப், டாப்சிக்கு சொந்தமான வீடு, அலுவலகங்களில் சோதனை தொடர்வதாகவும் வருமானவரித்துறை கூறியது.

  இந்நிலையில் வருமான வரித்துறை சோதனையில் தனது வீட்டில் இருந்து 5 கோடி ரூபாய்க்கான ஆவணம் கைப்பற்றப்பட்டதாக வெளியான தகவலை நடிகை டாப்சி மறுத்துள்ளார். கடந்த புதன்கிழமை நடிகை டாப்சி, இயக்குநர் அனுராக் காஷ்யப் உள்ளிட்டோருக்கு சொந்தமான 30க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது. சோதனைக்கு பிறகு முதன்முறையாக டிவிட்டரில் டாப்சி பதிவை செய்துள்ளார்.

  அதில் 3 நாட்களாக நடத்திய சோதனையில் பாரிசில் தனது பெயரில் இல்லாத பங்களாவின் சாவியை வருமான வரித்துறையினர் தேடியதாக கேலியாக குறிப்பிட்டுள்ளார். 2013ம் ஆண்டு தனக்கு சொந்தமான இடங்களில் எந்த வருமான வரிசோதனையும் நடைபெறவில்லை என்றும் டாப்சி கூறியுள்ளார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: