Home /News /entertainment /

ஷங்கர் படம் குறித்து கார்த்திக் சுப்பராஜ் வெளியிட சுவாரஸ்ய தகவல்!

ஷங்கர் படம் குறித்து கார்த்திக் சுப்பராஜ் வெளியிட சுவாரஸ்ய தகவல்!

கார்த்திக் சுப்பராஜ், ஷங்கர்

கார்த்திக் சுப்பராஜ், ஷங்கர்

RC 15: கியாரா அத்வானி, ரகுமான், ஜெயராம், அஞ்சலி உட்பட பலர் நடித்து வரும் இந்தத் திரைப்படத்தின் கதையை எழுதி இருப்பவர் கார்த்திக் சுப்பராஜ்.

  • News18
  • Last Updated :
ஷங்கர் தெலுங்கில் இயக்கி வரும் ராம்சரனின் Pan-India திரைப்படம் எந்த ஜானரில் உருவாகிறது என்ற சுவாரசியமான தகவலை கார்த்திக் சுப்பராஜ் வெளியிட்டுள்ளார்.

லைகா உடன் ஏற்பட்ட தகராறில் இந்தியன் 2 படத்தை பாதியில் நிறுத்தி தெலுங்கில் படம் இயக்க சென்றார் ஷங்கர். ராம் சரண் நடிப்பில் தில்ராஜு தயாரிப்பில் அவர் இயக்கி வரும் படம் வேகமாக வளர்ந்து வருகிறது. சுமார் 170 கோடி பட்ஜெட்டில் தயாராகும் இந்தப் படத்தின் சேட்டிலைட், டிஜிட்டல் உரிமைகளை மட்டும் சுமார் 200 கோடிகளுக்கு ஸீ நெட்வொர்க் விலை பேசி உள்ளதாக கூறப்படுகிறது.

Also read... ஏஜிஎஸ் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன்!
கியாரா அத்வானி, ரகுமான், ஜெயராம், அஞ்சலி உட்பட பலர் நடித்து வரும் இந்தத் திரைப்படத்தின் கதையை எழுதி இருப்பவர் கார்த்திக் சுப்பராஜ். இந்தத் தகவலை ஏற்கனவே ஷங்கர் வெளியிட்டிருந்தார். அதற்கு முக்கிய காரணமாக இருந்தது உதவி இயக்குநர் ஒருவர் வெளியிட்ட குற்றச்சாட்டு. நான் கார்த்திக் சுப்பாராஜிடம் சொன்ன கதையை அவர் ஷங்கரிடம் சொல்ல அதுதான் இப்பொழுது ஷங்கர் - ராம் சரண் திரைப்படமாக உருவாகி வருகிறது என வெளிப்படையாக குற்றம் சாட்டியிருந்தார். அந்தப் பிரச்சனை அத்தோடு அமுக்கப்பட்டது. அந்த பிரச்சினையின் போது தான் ஷங்கர் படத்தின் கதையை கார்த்திக் சுப்பாராஜ் எழுதி உள்ளார் என்ற தகவல் பெரும்பாலானவர்களுக்கு தெரிய வந்தது.


"நான் சொன்ன கதையில்தான் ராம் சரணின் படம் தயாராகி வருகிறது. அந்த கதையை ஷங்கர் அவருடைய பாணியில் டெவலப் செய்து எடுத்து வருகிறார். படத்தைப் பார்க்க ஆவலாக உள்ளேன்" என கார்த்திக் சுப்பாராஜ் கூறியுள்ளார். மேலும், இது ஒரு பொலிடிக்கல் திரில்லர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் அரசியல் சார்ந்த கதையை ஷங்கர் எடுத்து வருவது உறுதியாககியுள்ளது.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Director sankar, Karthik subbaraj

அடுத்த செய்தி