சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது. சங்கத்தின் தலைவர் முரளி பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், தயாரிப்பாளர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்கு மாறாக ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி செயல்படுவதாக தயாரிப்பாளர் முரளி குற்றம்சாட்டினார்.
மேலும், தயாரிப்பாளர்கள் நலன்களை சீர்குழைக்கும் வகையில் தன்னிச்சையாக செயல்படும் ஆர்.கே.செல்வமணிக்கு தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தினர் கண்டனம் தெரிவித்தனர்.
ஃபெப்சியுடன் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் இனி செல்லாது என்றும், ஒப்பந்தங்கள் தங்களை எந்த வகையிலும் கட்டுப்படுத்தாது என்றும் தீர்மானம் நிறைவேற்றி உள்ளதாக தயாரிப்பாளர்கள் தெரிவித்தனர்.
Also read: விஜய்யின் பீஸ்ட் படத்தில் இணைந்த செல்வராகவன்...!
தொடர்ந்து பேசிய தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி படப்பிடிப்புக்கு வேண்டிய ஆட்களை பணியமர்த்திக்கொள்ள போவதாகவும் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
படப்பிடிப்பை நிறுத்தும் வகையில் யாரெனும் இடையூற செய்தால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க தயங்கமாட்டோம் என்று தயாரிப்பாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Fefsi அமைப்பின் நேரடி தலையீடு இல்லாமல் இனிமேல் படப்பிடிப்புகள் நடத்தப்படும் என்றும், எங்களுக்கு விருப்பப்பட்ட தொழிலாளர்களை நாங்கள் பயன்படுத்திக் கொள்கிறோம். இதற்கு யார் தடை செய்தாலும் நீதிமன்றத்தை நாடுவோம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
ஆர்.கே.செல்வமணி எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை அதனால் எங்களை காப்பாற்றிக்கொள்ள நாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளோம் என்றும் தயாரிப்பாளர்கள் தெரிவித்தனர்.
அதேப்போல திரையரங்க உரிமையாளர்கள் புரோஜக்டர் வாடகையாக தயாரிப்பாளர்களிடம் பணம் வசூலிப்பதை இனியும் ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் கூறியுள்ளனர். ஆன்லைன் மூலம் டிக்கெட் விற்பனை என்ற பெயரில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.