Home /News /entertainment /

நார்வே தமிழ் சினிமா திருவிழா... மாநாடு படத்திற்கு 4 விருதுகள் அறிவிப்பு

நார்வே தமிழ் சினிமா திருவிழா... மாநாடு படத்திற்கு 4 விருதுகள் அறிவிப்பு

மாநாடு

மாநாடு

மாநாடு படத்திற்கு தேவையான அளவான நடிப்பை அள்ளித்தந்த சிம்பு, பாராட்டுக்களை தற்போதும் குவித்து வருகிறார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    நார்வே தமிழ்சினிமா திருவிழாவையொட்டி, சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த மாநாடு திரைப்படத்திற்கு 4 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    கடந்த ஆண்டு வெளிவந்த படங்களில் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்ற படங்களில் மாநாடு படமும் ஒன்று. தமிழ் சினிமாவுக்கு புதியதொரு திரைக்கதையை இயக்குனர் வெங்கட் பிரபு மாநாடு படத்தில் கொடுத்திருந்தார்.

    இதையும் படிங்க :  மாநாடு படத்தின் அனைத்து மொழி ரீமேக் உரிமையையும் வாங்கிய பிரபல நிறுவனம்!

    சிம்புவின் முந்தைய படங்களின் சாயல் துளியும் இல்லாமல், கதையும், திரைக்கதையுமே மாநாடு படத்தின் கதாநாயகனாக இருந்தது. படத்திற்கு தேவையான அளவான நடிப்பை அள்ளித்தந்த சிம்பு, பாராட்டுக்களை தற்போதும் குவித்து வருகிறார். சிம்புவின் கெரியரில், மாநாடு படத்திற்கு தனி இடம் உண்டு என்பதை மறுக்க முடியாது.

    இதேபோன்று படத்தில் வில்லனாக நடித்த எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி. மகேந்திரன், வாகை சந்திர சேகர், எஸ்.ஏ.சந்திரசேகர், ஹீரோயின் கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்திருந்தனர். இசையமைப்பாளர் யுவன், ஒளிப்பதிவாளர் ரிச்சர்டு, எடிட்டர் பிரவீன் ஆகியோரும் தங்களது பணியை திறமையாக மேற்கொண்டதால், படம் தற்போது 50 நாட்களை கடந்தும் தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது.

    இதையும் படிங்க :  காஸ்ட்லி வில்லனாக மாறிய எஸ்.ஜே.சூர்யா...!

    முன்பு மாநாடு படத்தை தீபாவளியன்று ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருந்தது. பின்னர் பல பிரச்னைகளை கடந்து ஒருவழியாக கடந்த நவம்பர் 25-ம்தேதி வெளியாகி, எதிர்பாராத அளவுக்கு பாராட்டுக்களையும் வரவேற்பையும் பெற்றது.

    மாநாடு படத்திற்கு பல விருதுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், நார்வே தமிழ்சினிமா திருவிழாவில் 4 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    சிறந்த இயக்குனர், வில்லன் நடிகர், எடிட்டர் மற்றும் இசையமைப்பாளர் ஆகிய 4 பிரிவுகளில் மாநாடு படத்திற்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை படக்குழுவினர் உற்சாகத்துடன் பகிர்ந்துள்ளனர்.



    4 பிரிவுகளில் மாநாடு படத்திற்கு விருது அறிவிக்கப்பட்டிருந்தாலும், கதாநாயகன் சிம்புவிற்கு விருது அறிவிக்கப்படாதது, அவரது ரசிகர்களை கொஞ்சம் ஏமாற்றம் அடையச் செய்துள்ளது.

    இதையும் படிங்க :  STR இனிமேல் டாக்டர். சிலம்பரசன் டி.ஆர்... பட்டம் வழங்கி கவுரவித்தது வேல்ஸ் பல்கலைக் கழகம்

     
    Published by:Musthak
    First published:

    Tags: Maanadu

    அடுத்த செய்தி