முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / தன்னை பற்றி மிக மோசமாக பேசிய பயில்வான் ரங்கநாதனுக்கு எதிர்ப்பு தெரிவித்த நடிகை ஓவியா!

தன்னை பற்றி மிக மோசமாக பேசிய பயில்வான் ரங்கநாதனுக்கு எதிர்ப்பு தெரிவித்த நடிகை ஓவியா!

ஓவியா

ஓவியா

பயில்வான் ரங்கநாதன் தன்னை பற்றி கூறி உள்ள சர்ச்சை தகவலுக்கு ட்விட்டர் மூலம் எதிர்வினையாற்றி இருக்கிறார் நடிகை ஓவியா.

  • Last Updated :

வெள்ளித்திரை கிசுகிசுக்களுக்கு பெயர் போனது. அரசல் புரசலாக வெளி வரும் கிசுகிசுக்கள் பல ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் நிலையில் சண்டை, காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமான நடிகர் பயில்வான் ரங்கநாதன் பல மாதங்களாக திரைத்துறை ரகசியங்களை வெளியே வெளிப்படையாக சொல்கிறேன் என்று பல பிரபலங்கள் பற்றி அதிர வைக்கும் தகவல்களை யூடியூப் சேனல்களில் வெளிப்படுத்தி வருகிறார்.

இதற்கு திரைபிரபலங்கள் மத்தியில் கடும் ஏதிர்ப்பு எழுந்து வரும் நிலையில் சமீபத்தில் தமிழ் வெள்ளித்திரை நடிகைகள் பலர் பற்றி சில தகவல்களை சொல்லி நெட்டிசன்களை மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். பயிலான் ரங்கநாதன் யூடியூப் சேனல் மற்றும் பேட்டிகள் மூலம் நடிகர், நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய பல தகவல்களை ரகசியங்களை சொல்வதாக கூறி பகிர்ந்து வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதனிடையே அவர் சமீபத்தில் ‘டார்ச்சரால் சினிமாவை விட்டு ஓடிப்போன நடிகைகள்’ என்ற தலைப்பில் வீடியோவை வெளியிட்டு உள்ளார். சமீபத்திய குறிப்பிட்ட வீடியோ ஒன்றில் டிகர் பயில்வான் ரங்கநாதன் நடிகர் கமலுடன் விருமாண்டியில் நடித்த அபிராமி, நடிகை ஷெரின், நடிகை மந்த்ரா, நடிகை காதல் சந்தியா, நடிகை சதா, நடிகை பூஜா, சுனைனா சோனியா அகர்வால் என பல பிரபல நடிகைகளின் திரை வாழ்க்கை மற்றும் ரகசியங்களை சொல்வதாக கூறியும், சில நடிகைகள் தங்கள் சினி மார்க்கெட்டை ஏன் இழந்தனர் என்பது பற்றியும் அவர் பேசி பல சர்ச்சை கருத்துக்களை தெரிவித்து இருந்தார்.

அதே வீடியோவில் களவாணி திரைப்படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்ததோடு மட்டுமல்லாமல், பிக்பாஸில் பங்கேற்று தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான நடிகை ஓவியா பற்றியும் பல அதிர வைக்கும் சர்ச்சை தகவல்களை கூறி இருக்கிறார் பயில்வான் ரங்கநாதன். பல நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி பேசியுள்ள நடிகர் ரங்கநாதன், ஓவியா பற்றியும் பேசி இருப்பது அவரை கோபமடைய செய்து இருக்கிறது. நடிகை ஓவியா சோஷியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர்.

Also read... ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் வெஸ்ட் சைட் ஸ்டோரி ரிலீஸ் தேதி அறிவிப்பு...!

பயில்வான் ரங்கநாதன் தன்னை பற்றி கூறி உள்ள சர்ச்சை தகவலுக்கு சோஷியல் மீடியாவான ட்விட்டர் மூலம் எதிர்வினையாற்றி இருக்கிறார் நடிகை ஓவியா. தனது ட்விட்டரில் நடிகர் பயில்வான் ரங்கநாதன் தன்னுடன் சேர்த்து பல முன்னணி நடிகைகள் பற்றி தெரிவித்துள்ள சர்ச்சை தகவல்கள் அடங்கிய வீடியோவை ஷேர் செய்து உள்ள நடிகை ஓவியா, "இதுவும் பெண்களுக்கு கொடுக்கப்படும் பாலியல் அல்லாத துன்புறுத்தல் தான் (non sexual women harassment)"என்று பதிவிட்டு தனது கோபத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

top videos

    இந்த ட்விட்டர் பதிவில் #WomensRights என்ற ஹேஷ்டேக்கை சேர்த்து பதிவிட்டு, ரசிகர்களிடமிருந்து தனக்கு ஆதரவை பெற்று வருகிறார் ஓவியா. பயில்வான் ரங்கநாதனின் விடியோவை பார்த்து கொந்தளித்துள்ள ஓவியா ஆர்மி உறுப்பினர்கள் பெண்களுக்கு எதிரான இது போன்ற வீடியோக்களை டெலிட் செய்யுமாறு யூடியூபிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே ஓவியாவுக்கு ஆதரவாக குரல் எழுப்பி உள்ள பாடகி சின்மயி, "இந்த மனிதன் (பயில்வான் ரங்கநாதன்) எப்போதுமே இப்படி தான். அவரை போன்றே பல ஆடியன்ஸ் இருப்பதால் தான் இன்னும் இந்த மனிதன் இது மாதிரி பேசி கொண்டு திரிகிறார்"என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    First published:

    Tags: Actress Oviya