• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • வார இறுதியில் 900 கோடிகளை வசூலித்த No Time to Die!

வார இறுதியில் 900 கோடிகளை வசூலித்த No Time to Die!

No Time to Die

No Time to Die

சீனாவில் வெளியாகாமல் 100 மில்லியன் டாலர்களை சர்வதேச சந்தையில் ஒரு படம் வசூலிப்பது இந்த பெருந்தொற்று காலத்தில் இதுவே முதல்முறை.

  • Share this:
    25-வது ஜேம்ஸ் பாண்ட் படமான நோ டைம் டூ டை முதல் வார இறுதியில் சர்வதேச அளவில் 119 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது. நமது ரூபாய் மதிப்பில் இது சுமார் 900 கோடிகளாகும்.

    நோ டைம் டூ டை சென்ற வருட ஆரம்பத்திலேயே வெளியாகியிருக்க வேண்டும். கொரோனா பெருந்தொற்றால் பட வெளியீட்டை தள்ளி வைத்தனர். செப்டம்பர் 30-ஆம் தேதி 54 நாடுகளில் படம் வெளியானது. இதில் இந்தியாவும் உண்டு. இந்த 54 நாடுகளில் முதல்வார இறுதியில் சுமார் 119 மில்லியன் டாலர்களை படம் வசூலித்துள்ளது.

    இதற்கு முன்பு வெளியான ஸபெக்டர் முதல்வார இறுதியில் 123 மில்லியன் டாலர்களை வசூலித்திருந்தது. அதற்கு முன்பு வெளியான ஸ்கைஃபால் 109 மில்லியன் டாலர்களை வசூலித்தது. நோ டைம் டூ டை 90 மில்லியன் டாலர்களை வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    கொரோனா பெருந்தொற்றால் பல நாடுகளில் திரையரங்குகள் 50 சதவீத பார்வையாளர்களுடன் இயங்குவதும், ரசிகர்கள் திரையரங்குகளுக்கு வர தயங்குவதும், படத்தின் வசூலை பாதிக்கும் என 90 மில்லியன் டாலர்களை வசூலிக்கும் என எதிர்பார்த்தனர். மாறாக 119 மில்லியன் டாலர்களை படம் முதல்வார இறுதியில் குவித்துள்ளது. சீனாவில் வெளியாகாமல் 100 மில்லியன் டாலர்களை சர்வதேச சந்தையில் ஒரு படம் வசூலிப்பது இந்த பெருந்தொற்று காலத்தில் இதுவே முதல்முறை.

    அக்டோபர் 8 ஆம் தேதி நோ டைம் டூ டை யுஎஸ் உள்பட சில நாடுகளிலும், இம்மாத இறுதியில் சீனாவிலும் வெளியாகிறது. சுமார் 250 மில்லியன் டாலர்களில் நோ டைம் டூ டை தயாரானது. உலக அளவில் சுமார் 100 மில்லியன் டாலர்களை படத்தின் புரமோஷனுக்கு செலவிட்டதாக கூறப்படுகிறது. ஆக, குறைந்தது 450 மில்லியன் டாலர்களுக்கு மேல் வசூலித்தால் மட்டுமே படம் லாபம் என்று சொல்ல முடியும். யுஎஸ் மற்றும் சீன வசூல் அந்த லாபத்தை தரும் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: