Home /News /entertainment /

30 வருட திரை வாழ்க்கையில் தளபதி 67 படத்திற்காக விஜய் செய்யும் விஷயம்...

30 வருட திரை வாழ்க்கையில் தளபதி 67 படத்திற்காக விஜய் செய்யும் விஷயம்...

விஜய் - லோகேஷ் கனகராஜ்

விஜய் - லோகேஷ் கனகராஜ்

'தளபதி 67' படத்தில் பாடல்களோ, கதாநாயகிகளோ, காதல் காட்சிகளோ, பஞ்ச் டயலாக்குகளோ கிடையாது என்பது தான் தற்போது பரபரப்பான செய்தி.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    தனது 30 வருட திரை வாழ்க்கையில் தளபதி 67 படத்துக்காக விஜய் புதிய விஷயம் ஒன்றை கையாளவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    தளபதி விஜய் தற்போது வம்சி பைடிபள்ளி இயக்கும் 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார். இதற்கடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் 'தளபதி 67' படத்தில் நடிக்கவிருக்கிறார். கமல் நடிப்பில் லோகேஷ் இயக்கிய 'விக்ரம்' திரைப்படம் சமீபத்தில் தமிழ் சினிமாவின் மிகப் பெரிய பிளாக்பஸ்டர் படமாக வெற்றிப் பெற்றதால், இன்னும் தொடங்கப்படாத தளபதி 67 படத்திற்கான ஹைப் அதிகமாக உள்ளது.

    படத்தில் விஜய் 50 வயது மும்பை கேங்ஸ்டராக நடிக்கிறார் என்றும், சமந்தா நெகட்டிவ் ரோலில் நடிக்கிறார் என்றும், பிருத்விராஜ் சுகுமாரன், சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட ஆறு வில்லன்கள் நடிக்கலாம் என்றும் ஏற்கனவே தெரிவித்திருந்தோம். அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் எனவும், இதன் படப்பிடிப்பு இந்தாண்டு இறுதியில் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் 'தளபதி 67' படத்தில் பாடல்களோ, கதாநாயகிகளோ, காதல் காட்சிகளோ, பஞ்ச் டயலாக்குகளோ கிடையாது என்பது தான் தற்போது பரபரப்பான செய்தி. 'கைதி', 'விக்ரம்' போன்ற லோகேஷ் கனகராஜ் ஸ்டைலில் தளபதி 67 படத்தின் திரைக்கதை அமையும் என்று கூறப்படுகிறது.

    தேங்க்யூ ஷங்கர் சார்... அதிதி ஷங்கர் உருக்கமான பதிவு!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    1992-ல் விஜய் ஹீரோவாக அறிமுகமானார். அதன்படி 30 வருடங்களில் இதுவரை பார்த்திராத ஸ்டைலில் ரசிகர்கள் அவரைப் பார்க்க முடியும் என்பதால், 'தளபதி 67' படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
    Published by:Shalini C
    First published:

    Tags: Thalapathy vijay

    அடுத்த செய்தி