அதற்கு ராகவா லாரன்ஸ் தான் சரியான ஆள் - கியாரா அத்வானி

ராகவா லாரன்ஸ் திரும்ப வருவார் என்று எதிர்பார்த்தேன். அதேபோல் அவர் வந்துவிட்டார். இந்தப் படத்தை இயக்குவதற்கான சரியான நபர் அவர்தான்.

அதற்கு ராகவா லாரன்ஸ் தான் சரியான ஆள் - கியாரா அத்வானி
கியாரா அத்வானி
  • News18
  • Last Updated: June 16, 2019, 6:08 PM IST
  • Share this:
லக்‌ஷ்மி பாம் படத்தை இயக்க சரியான நபர் ராகவா லாரன்ஸ் தான் என்று நடிகை கியாரா அத்வானி கூறியுள்ளார்.

ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த முனி படத்தின் இரண்டாவது பாகமாக 2011-ம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் காஞ்சனா.

8 வருடங்களுக்குப் பிறகு இந்தப் படத்தின் இந்தி ரீமேக்கில் ஈடுபட்டுள்ளார் ராகவா லாரன்ஸ். ‘லக்‌ஷ்மி பாம்’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் நடிகர் அக்‌ஷய்குமார் நாயகனாக நடிக்கிறார். அவருடன் கியாரா அத்வானி ஜோடி சேர்ந்துள்ளார்.


இந்தப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மே 18-ம் தேதி வெளியானது. பர்ஸ்ட் லுக் போஸ்டரில் இயக்குநர் ராகவா லாரன்சின் பெயர் இடம்பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தியது.இதைத்தொடர்ந்து படக்குழுவினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ராகவா லாரன்ஸ் விலகினார். பின்னர் படக்குழுவினர் நடத்திய பேச்சுவார்த்தையால் மீண்டும் படத்தை இயக்க ராகவா லாரன்ஸ் ஒப்புக் கொண்டார்.

இந்நிலையில் இதுகுறித்து பேட்டியளித்திருக்கும் நடிகை கியாரா அத்வானி, ராகவா லாரன்ஸ் திரும்ப வருவார் என்று எதிர்பார்த்தேன். அதேபோல் அவர் வந்துவிட்டார். இந்தப் படத்தை இயக்குவதற்கான சரியான நபர் அவர்தான். ஏனென்றால் அவருடன் முதல்கட்ட படப்பிடிப்பில் பணியாற்றியுள்ளோம். அவர் சிறப்பானவர். நல்ல மனிதனும் கூட.

ஏற்கெனவே காஞ்சனா படத்தை தமிழில் இயக்கி நடித்துள்ளார். அதனால் இந்தப் படம் அவரது குழந்தை. லக்‌ஷ்மி பாம் படத்தை அவரை விட வேறு யாராலும் புரிந்துகொள்ள முடியாது. அடுத்த கட்ட படப்பிடிப்பை எதிர்நோக்கியுள்ளோம்” என்று கூறியுள்ளார்.

இரண்டாவது கட்ட படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதத்தில் துவங்க இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

வீடியோ: நடிகர் சங்கத்தேர்தலில் ரஜினி, கமல் எதிர்.. எதிர் அணியா? - பாக்யராஜ் விளக்கம்

First published: June 16, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading