முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / Rajinikanth: ரஜினி தரப்பில் இருந்து கஸ்தூரியிடம் யாரும் பேசவில்லை - மக்கள் தொடர்பாளர் விளக்கம்

Rajinikanth: ரஜினி தரப்பில் இருந்து கஸ்தூரியிடம் யாரும் பேசவில்லை - மக்கள் தொடர்பாளர் விளக்கம்

ரஜினிகாந்த் - கஸ்தூரி

ரஜினிகாந்த் - கஸ்தூரி

“தலைவரோ, தலைவர் குடும்பத்திலிருந்தோ யாரும் பேசவில்லை, எந்த விதமான விளக்கமும் கொடுக்க வில்லை என்பது தான் நிஜம்”

  • Last Updated :

அமெரிக்கா சென்றுள்ள ரஜினி மீது சர்ச்சையைக் கிளப்பியிருந்தார் நடிகை கஸ்தூரி. பின்னர் அலைபேசியில் அழைத்து விவரத்தை விளக்கினார்கள் என்று அவரே ட்விட்டரில் தெரிவித்திருந்தார். இத்தகவலை ரஜினியின் மக்கள் தொடர்பாளர் மறுத்துள்ளார்.

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட ரஜினிகாந்த் குறிப்பிட்ட இடைவெளியில் அமெரிக்கா சென்று பரிசோதனை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அதன்படி சில வாரங்களுக்கு முன்பு அவர் அமெரிக்கா சென்றார். சில தினங்களுக்கு முன்னர் ரஜினி தனியார் மருத்துவமனையிலிருந்து, தனது மகள் ஐஸ்வர்யா தனுஷுடன் வெளியே வரும் புகைப்படமும் வெளியானது. இது குறித்து தனது ஐயத்தை ட்விட்டரில் வெளியிட்டிருந்தார் நடிகை கஸ்தூரி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மே மாதத்திலிருந்து இந்தியர்கள் அமெரிக்கா செல்ல அமெரிக்க அரசு தடை விதித்திருந்தது. அமெரிக்காவில் படிக்கும், பணிபுரியும் இந்தியர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. மருத்துவ சிகிச்சைக்கு விலக்கு எதுவும் இல்லாத நிலையில், ரஜினிக்கு மட்டும் எப்படி அமெரிக்கா செல்ல அனுமதி அளிக்கப்பட்டது என கஸ்தூரி கேள்வி எழுப்பியிருந்தார்.

பின்னர், "அலைபேசியில் அழைத்து விஷயத்தை விளக்கினார்கள். ஆச்சரியம் கலந்த நன்றி. நாரதர் கலகம் நன்மையில் முடிந்தது. என் உள்மன கலக்கமும் முடிவுக்கு வந்தது. நல்ல செய்தி. நானே முதலில் சொல்கிறேன். பூரண நலமுடன் புதுப்பொலிவுடன் தலைவரை வரவேற்க தமிழகம் தயாராகட்டும்" என்று அவரே கடந்த செவ்வாய் கிழமை ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இத்தகவலை ரஜினிகாந்தின் மக்கள் தொடர்பாளர் ரியாஸ் அகமது மறுத்துள்ளார். கஸ்தூரியின் ட்வீட்டை குறிப்பிட்டு, “தலைவரோ, தலைவர் குடும்பத்திலிருந்தோ யாரும் பேசவில்லை, எந்த விதமான விளக்கமும் கொடுக்க வில்லை என்பது தான் நிஜம்” எனத் தெரிவித்துள்ளார்.

அதற்கு பதிலளித்த கஸ்தூரி, ”என்னை அழைத்து பேசியது கங்கை அமரன் அவர்கள். அவர் பகிர்ந்த விவரங்களை நான் யாரிடமேனும் சரி பார்க்க வேண்டும் என்றெல்லாம் நினைக்கவில்லை” எனத் தெரிவித்திருக்கிறார். அடிக்கடி சர்ச்சையில் சிக்கும் கஸ்தூரி, இப்போது ரஜினி ரசிகர்களிடம் சிக்கியுள்ளார்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Rajinikanth