சாமியைக் காப்பாற்றுகிறேன் என்று கூறும் கூட்டத்தோடு பழகாதீங்க...! விஜய் சேதுபதி

மதத்தைச் சொல்லி கடவுளை பிரிக்கப் பார்க்கிறார்கள். மனிதனுக்கும் , கடவுள்ளுக்கும் இடையில் மதம் என்பது கிடையாது.

சாமியைக் காப்பாற்றுகிறேன் என்று கூறும் கூட்டத்தோடு பழகாதீங்க...! விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி
  • Share this:
மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் சேதுபதி மதம் பற்றியும், கொரோனா வைரஸ் குறித்தும் பேசிய பேச்சு அரங்கத்தில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்ப்பைப் பெற்றது.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா, சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள லீலா பேலஸில் நடைபெற்றது. இதில், நடிகர் விஜய், விஜய் சேதுபதி , படத்தின் கதாநாயகி மாளவிகா மோகனன், படத்தின் இசையமைப்பாளர் அனிருத், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், என பல பிரபலங்கள் பங்குபெற்றனர்.

அதில் விஜய்க்கு முன் பேசிய விஜய் சேதுபதி ரசிகர்களின் ஆரவாரக் கைத்தட்டல்களுடன் மேடையேறினார். பின் அவருடைய வருகைக்குக் கிடைத்த கைத்தட்டல்களைக் காட்டிலும் அவருடைய பேச்சுக்கு கைத்தட்டல்கள் மட்டுமன்றி விசில் சத்தங்களாலும் அரங்கம் அதிர்ந்தது. அதிலிருந்து சுருக்கமாக உங்களுக்காக...


கொரோனா வைரஸ் குறித்து பேசிய விஜய் சேதுபதி “ கொரோனாவை நினைத்து யாரும் பயப்பட வேண்டாம். இது இயல்பாக நடக்கும் ஒன்று. மனதை பலப்படுத்திக்கொள்ளுங்கள். மனிதனைக் காப்பாற்ற மனிதன் தான் வருவான். மேலிருந்து ஒன்று வராது. சொந்த உறவுகளையே தொட்டுப் பேச பயப்படும் இந்த சூழ்நிலையிலும் தொட்டு மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களுக்கு என்னுடைய நன்றி “ என்று பேசினார்.அதைத் தொடந்து மேலும் பேசிய சேதுபதி ”இன்னொரு வைரஸ் தற்போது பரவி வருகிறது. சாமிக்காக எல்லோரும் சண்டைப் போட்டுக்கொள்கிறார்கள். அது ஏன் என்று புரியவில்லை. சாமி பல கோடி வருடங்களாக இருக்கிறது. சாமியை காப்பாற்ற சாமி இன்னும் மகாமனிதனைப் படைக்கவில்லை. சாமி தன்னைக் காப்பாற்றிக்கொள்ளும். சாமியைக் காப்பாற்றுகிறேன் என்று கூறும் கூட்டத்தோடு பழகாதீர்கள். . சாமியை சாதாரண மனிதனால் காப்பாற்ற முடியாது. அது புருடா..தயவு செய்து நம்பாதீங்க... யாராவது சாமி பற்றியோ என்னுடைய மதம் இப்படிச் சொல்கிறது என்று பேசினால் பதிலுக்கு என்னுடைய மதம் இப்படி சொல்கிறது என்று பேசாதீர்கள் அதற்கு பதில் மனிதத்தையும், மனித நேயத்தையும் கற்றுக்கொடுங்கள். கடவுள் மேல இருக்கான். பூமியில் வாழும் மனிதர்கள் நாம் தான் ஒவ்வொருவருக்கும் பக்கபலம். இது மனிதன் வாழ்வதற்கான இடம். சகோதரத்துவத்தோடு சந்தோஷமாக வாழுங்கள். அன்பை மட்டுமே பகிர்ந்து வாழுங்கள். மதத்தைச் சொல்லி கடவுளை பிரிக்கப் பார்க்கிறார்கள். மனிதனுக்கும் , கடவுள்ளுக்கும் இடையில் மதம் என்பது கிடையாது. பிளீஸ் நம்புங்க...” என்று பேசினார்.

படிக்க :

விஜய்யின் ‘மாஸ்டர்’ ட்ரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு - மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

பேருல மட்டும் இடம் கொடுக்கல; மனசுலயும் குடுத்துட்டு இருக்காரு...! விஜய் பேச்சு
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTubeFirst published: March 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading