Rajinikanth: அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை -  ரஜினிகாந்த் திட்டவட்டம்!

ரஜினிகாந்த்

அரசியலில் எக்காலத்திலும் ஈடுபடப் போவதில்லை என்பதால் மக்கள் மன்றத்தை கலைத்து விட்டு, ரசிகர் மன்றமாக தொடர இருப்பதாக கூறியிருக்கிறார் ரஜினிகாந்த்.

  • Share this:
வருங்காலத்தில் அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை என்றும் மக்கள் மன்றத்தை கலைத்து விட்டு ரசிகர் மன்றமாக தொடரப் போவதாகவும் நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.

2017-ஆம் ஆண்டு தான் அரசியலுக்கு வருவது உறுதி என்று நடிகர் ரஜினிகாந்த் என்று அறிவித்தார். பின்னர் அரசியலில் வருவதற்காக கட்சி தொடங்கி அதனை பலப்படுத்தும் விதமாக தன்னுடைய ரசிகர் மன்றத்தினர் ரஜினி மக்கள் மன்றம் என்று பெயர் மாற்றி பல புதிய கிளை நதியான நிர்வாகிகளை நியமித்தார்.

கடந்தாண்டு ஒருநாள் உடல்நிலை காரணமாக அரசியலுக்கு வர முடியவில்லை என்ற முடிவை அறிக்கையின் வாயிலாக மட்டும் ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார். இதனிடையே திடீரென இரண்டு தினங்களுக்கு முன்பு மாவட்ட நிர்வாகிகளை சென்னை வரச்சொல்லி மக்கள் மன்றத்தின் சார்பில் அழைப்பு வந்தது.

அதற்காக இன்று காலை 9 மணிக்கு மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் அனைவரும் ராகவேந்திரா மண்டபத்தில் கூடியிருந்தனர். கூட்டத்திற்கு கிளம்பும் முன்னர் போயஸ்கார்டன் இல்லத்தில் பேட்டியளித்த ரஜினிகாந்த், மக்கள் மன்றத்தின் தேவை என்ன என்பது குறித்தும், அரசியலில் ஈடுபடுவீர்களா என்ற மக்களின் கேள்விக்கும் விடை அளிக்க போவதாக பேட்டி அளித்தார்.

ஏமாற்றமும் ஆதரவும்

அதன்பின்னர் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் சுமார் ஒரு மணி நேரம் மாவட்ட நிர்வாகிகளுடன் ரஜினிகாந்தின் ஆலோசனை நடைபெற்றது. அதற்குப் பிறகு வெளியே கூடியிருந்த தன்னுடைய ரசிகர்களுக்கு கை காண்பித்துவிட்டு ரஜினிகாந்த் வீட்டிற்குச் சென்றார்.

பிறகு அறிக்கை வெளியிட்டு இருக்கும் ரஜினிகாந்த் தான் இனி அரசியலில் எக்காலத்திலும் ஈடுபடப் போவதில்லை என்பதால் மக்கள் மன்றத்தை கலைத்து விட்டு, ரசிகர் மன்றமாக தொடர இருப்பதாக கூறியிருக்கிறார். இதன் மூலம் இனி அவர் அரசியலில் ஈடுபடப் போவதில்லை என்பதும் மக்கள் மன்றம் கலைக்கப்பட்டுள்ளது என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது குறித்து ரஜினி மக்கள் மன்ற முன்னாள் நிர்வாகி ஆர்.எஸ்.ராஜன், நாற்பதாண்டுகளுக்கு மேல் ரஜினி ரசிகர் மன்றத்துடன் இணைந்து, மக்கள் பணி செய்து வருவதாகவும், மக்கள் மன்றம் தொடங்கி ரஜினி தங்களை ஏமாற்றி விட்டதாகவும் கூறியிருக்கிறார்.

மக்கள் மன்றமானாலும் சரி, ரசிகர் மன்றமானாலும் சரி, ரஜினிகாந்துடன் இணைந்து செயல்படுவோம் என ராகவேந்திரா மண்டபத்தின் வாயிலில் கூடியிருந்த அவருடைய ரசிகர்களும் மாவட்ட நிர்வாகிகளும் தெரிவித்தனர்.

இந்த நிலையில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் அண்ணாத்த திரைப்படம் தீபாவளிக்கு திரைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published: