முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / Parvathy: மத கொண்டாட்டங்கள் வேணாம்: கேரள திருவிழாவுக்கு நடிகை பார்வதி எதிர்ப்பு

Parvathy: மத கொண்டாட்டங்கள் வேணாம்: கேரள திருவிழாவுக்கு நடிகை பார்வதி எதிர்ப்பு

பார்வதி

பார்வதி

கொரோனா கோரத்தாண்டவம் ஆடும் இந்த நேரத்தில் மத கொண்டாட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் நடிகை பார்வதி.

  • Last Updated :

கொரோனா கோரத்தாண்டவம் ஆடும் இந்த நேரத்தில் மத கொண்டாட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் நடிகை பார்வதி.

மலையாளத்தின் முன்னணி நடிகைகளில் ஒருவர் பார்வதி. தமிழில் பூ, உத்தமவில்லன், மரியான் உள்பட சில படங்களில் நடித்துள்ளார். கேரளாவில் நடிகை காரில் கடத்தி மானபங்கம் செய்யப்பட்ட வழக்கில் நடிகர் திலீப் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்ட போது, முன்னணி நட்சத்திரங்கள் திலீபை நடிகர் சங்கத்திலிருந்து நீக்க வேண்டும் என குரல் கொடுத்தனர். அதில் முக்கியமானவர் பார்வதி.

அதன் பிறகு அவரை திரையுலகின் பெரும்பாலான தயாரிப்பாளர்கள், நடிகர்கள், இயக்குநர்கள் ஒதுக்க ஆரம்பித்தனர். பட வாய்ப்புகள் பார்வதிக்கு குறைந்தன. எனினும் மனதுக்கு சரி என்றுபடுவதை பட்டவர்த்தனமாக வெளியிட அவர் தயங்கியதில்லை.

கொரோனா காலத்தில் நடத்தப்பட்ட கும்பமேளாவால் பல்லாயிரம் பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ள நிலையில், ஏப்ரல் 23-ம் தேதி, அதாவது நாளை மறுநாள் கேரளாவின் பாரம்பரிய திருவிழாவான திருச்சசூர் பூரத்தை கொண்டாட தயாராகி வருகின்றனர். திருச்சசூர் வடக்குநாதன் கோவிலை மையப்படுத்தி நடத்தப்படும் பூரம் திருவிழா செண்டமேளம், ஐம்பதுக்கும் மேற்பட்ட யானைகள், பல லட்சம் பக்தர்கள் என்று பிரமாண்டமாக நடைபெறும்.

கொரோனா தொற்று கேரளாவில் உச்சத்தில் இருக்கையில் பூரம் திருவிழா கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளார் நடிகை பார்வதி. மதவாதிகள் பலரும் அவருக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பெருந்தொற்று காலத்தில் மத, அரசியலின் பெயரில் கட்டுப்பாடுகளை காற்றில் பறக்கவிடுவது பெரும் ஆபத்தில் முடியும். சரியான நேரத்தில் முக்கியமான பிரச்சனைக்கு நேர்மையாக குரல் கொடுத்திருக்கிறார் பார்வதி. அவர் குரலை வலுப்படுத்த வேண்டியது அனைவரின் கடமை.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Actress Parvathy